திருட்டு கதையை சினிமாவாக எடுத்துவிட்டு புரட்சி பேசுவதா? விஜயை விமர்சிக்கும் ஹெச்.ராஜா!

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்றைய தினம் வெளியானது. இத்திரைப்படத்தில் தமிழக அரசினையும், முதல்வரையும் விமர்சிக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

இது ஆளும் தரப்பில் கடும் அதிருப்தியினை உண்டாக்கிய சூழலில், நடிகர் விஜயை மிக காட்டமாக விமர்சித்துவருகிறது தமிழிசை, ஹெச்.ராஜா தரப்பு. வெறுமனே சினிமாவில் புரட்சி பேசுபவர்கள் இந்த சமூகத்திற்காக என்ன பாடாற்றினார்கள். அவர்களின் முதல்வர் கனவு ஒருபோதும் நனவாகப்போவதில்லை என தமிழிசை நடிகர்களின் அரசியல் வருகையை முன்னர் விமர்சித்திருந்த நிலையில், தற்போது நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், கதையை திருடி சினிமா எடுப்பவர்கள், அந்த சினிமாவில் புரட்சி பேசுவதெல்லாம் எந்த வகையில் நியாயம் என விஜயை விமர்சித்துள்ளார்.

முன்னதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சர்கார் கதை திருட்டு விவகாரத்தை குறிப்பிட்டு திருடுவதுதான் திருடுகிறீர்கள்.. நல்ல கதையாக திருடுங்கள் என தமது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-eelamnews.co.uk