சமூக நலத்திட்டங்களை தவறாக சித்தரிப்பது ஏன்? விஜயை விளாசும் திருமுருகன் காந்தி.!

அடிப்படை புரிதல்கள் ஏதுமின்றி அரசினது சமூக நலத்திட்டங்கள் குறித்து மக்களிடத்தில் தவறான கருத்துக்களை பரப்புவது ஏன் கேள்வியெழுப்பியுள்ளார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திமுருகன் காந்தி.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும், அரசினது சமூக நலத்திட்டங்கள் குறித்தும் தவறான கருத்துக்களும், விமர்சனங்களும் இடம் பெற்றிருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக ஆவேசமடைந்த அதிமுக தரப்பு, சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளையும், பேனர்களையும் அடித்து நொறுக்கினர். இதனால் நிலைகுலைந்துபோன படக்குழு, சர்ச்சைக்குரியதாக கருதப்படும் காட்சிகளை நீக்கப்படுவதாக ஒப்புதல் அளித்து அவ்வாறே நீக்கவும் செய்துள்ளது.

இந்த நிலையில், சர்கார் திரைப்படம் சமூக நீதி, இட ஒதுக்கீடு, அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்த புரிதலின்றி கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் திருமுருகன் காந்தி. அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கலாம். ஆனால், ஏழை ; எளியோர்களுக்கான சமூக நலத்திட்டங்கள் குறித்த அடிப்படை புரிதலின்றி முரணான கருத்துக்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

-athirvu.in