விஜய் நடித்திருந்த சர்கார் படம் கடந்த தீபாவளிக்கு ரிலீஸானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இப்படத்திற்கு ஆரம்பம் முதலே பிரச்சனைகள் வந்தவாறு தான் உள்ளது.
இதனால் இயக்குனருக்கும் நடிகர் விஜய்க்கும் ரசிகர்களையும் தாண்டி பல திரைப்பட பிரபலங்களும் தங்களது ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர்.
அவ்வாறு தனது ஆதரவை படம் ரிலீஸ் அன்றே நடிகர் கமல் கொடுத்திருந்தார். தற்போது மீண்டும் சமீபத்திய பேட்டியில் இந்த இலவச விஷயத்தை பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, மக்களின் பணத்தை அரசியல்வாதிகள் இலவசம் என்ற பெயரில் கஜானாவை காலி செய்கின்றனர். மக்களை அவர்கள் இலவசம் என்ற பெயரில் ஏமாற்றி வருகின்றனர்.
பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் வேண்டும், உழைக்கும் மக்களுக்கு இந்த தேவையில்லாத இலவசங்கள் வேண்டாம் என ஆவேசமாக பேசியுள்ளார்.
-athirvu.in