சினிமாவை மிரள வைத்துக்கொண்டிருக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் புது படங்களை வெளியான அன்றே திருட்டுத்தனமாக தன் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றது. மக்களும் திரையரங்குகளுக்கு செல்லாமல் கணினியிலோ, அல்லது கைபேசியிலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து படத்தை பார்த்து விடுகின்றனர்.
இதனால் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படுகிறது. ஒருபுறம் இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் எங்கிருந்து செயல்படுகிறது, இதன் அட்மின் யார், அதற்கு எப்படி பணம் கிடைக்கிறது, அவர்களை ஏன் தடுக்க முடியவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கு போலீசார் விடை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
மற்றொரு புறம் இவர்களுக்கு எப்படி வருமானம் வருகிறது என்றால் அது விளம்பரங்கள் மூலம்தான். மாதம் சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இருந்தும் இந்த விளம்பர கம்பெனியை தொடர்பு கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினர் தமிழ் ராக்கர்ஸ் குறித்து கேட்டால் கூட இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
-nakkheeran.in