ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் 2.0. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படம் இம்மாத 29 ஆம் தேதி ரிலிஸாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கஜா புயல் தமிழகத்தில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் இந்த 2.0 படத்தின் ரிலீஸின் போது பேனர், கட் அவுட் போன்றவற்றிற்காக ரஜினி ரசிகர் மன்றத்தினர் வைத்திருந்த பணத்தை இந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள செலவு செய்ய உள்ளனராம்.
இதனால் இம்மன்றங்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனை இம்மன்றத்தினரே நேரடியாக களத்திற்கு சென்று உதவி செய்ய உள்ளனர்.
-cineulagam.com