கஜா நிவாரணத்திற்கு கொடுக்கப்படும் சர்கார் படத்தின் ஒருநாள் வசூல் தொகை!

விஜய்யின் சர்கார் படம் கடந்த 6ம் தேதி வெளிவந்து, இன்னமும் கணிசமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். நடிகர் விஜய் கூட தன் மக்கள் இயக்கம் மூலம் உதவி நேரடியாக சென்று சேரும்படி செய்துள்ளார்.

இந்நிலையில் சர்கார் படத்தின் அமெரிக்க விநியோகஸ்தர் கஜா புயலுக்கு உதவுவதற்காக சர்கார் படத்தின் ஒரு நாள் வசூல் முழுவதும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

அது குறைந்தது 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

-athirvu.in