கஜா பட புயல் பாதிப்புக்காக இசைப்புயல் ரஹ்மான் எடுத்த முடிவு!

சமீபத்தில் வந்த கஜா புயல் தமிழகத்தில் நாகை, வேதாரணம், புதுக்கோட்டை என சில மாவட்டங்களை மிகவும் பாதித்துள்ளது. இதில் ஆடுமாடுகள், வன விலங்குகள், விவசாய பயிர்களும் சேதமடைந்துள்ளது.

சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. தன்னார்வ அமைப்புகள் முன் வந்து மக்களுக்கு தேவையான பொருட்களை, உணவுகளை வழங்கி வருகின்றன. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என சினிமா பிரபலங்களும் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

தற்போது இசையமைப்பாளர் ரஹ்மான் டிசம்பர் 24ல் டொரோண்டோவில் நடக்கவுள்ள தன்னுடைய இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

-cineulagam.com