காதலித்த கனடா பெண்ணை திருமணம் செய்த ஜாக்கி சான் மகள் ஹாங்காங் திரும்பினார்..

சுயபாலின காதலால் 31 வயது கனடா நாட்டுப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட அதிரடி மன்னன் ஜாக்கி சான் மகள் எட்டா என்ஜி(19) ஹாங்காங் நகருக்கு திரும்பியுள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திழுத்தவர் நடிகர் ஜாக்கி சான். ஹாங்காங் அழகு ராணி பட்டம்பெற்ற எலைன் என்ஜி யி லீய் என்ற பெண்ணுடன் கடந்த 1999-ம் ஆண்டுவாக்கில் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். இந்த உறவின் மூலம் பிறந்த ஒரே பெண் குழந்தையான எட்டா என்ஜி சோக் லாம் என்பவருக்கு தற்போது 19 வயதாகிறது.

ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட எட்டா என்ஜி, கடந்த ஆண்டில் கனடா நாட்டை சேர்ந்த அன்டி ஆட்டம் என்ற 31 வயது பெண்ணின்மீது காதல்வசப்பட்டார். ஓராண்டாக கனிந்துவந்த இவர்களின் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.கனடா நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக நவம்பர் 8-ம் தேதி அந்நாட்டு அரசு இவர்களுக்கு திருமண சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த தம்பதியர் ஹாங்காங் நகருக்கு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக, பிரபல தற்காப்பு கலை வல்லுனரான எட்டா என்ஜி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எங்கு சென்றாலும் சொந்த ஊரில் இருப்பது போன்ற பாதுகாப்பான உணர்வு கிடைப்பதில்லை. மனைவியும், மனைவியுமாக நாங்கள் தற்போது ஹாங்காங் நகருக்கு வந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜாக்கி சானின் ஆதரவு இல்லாமல் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்துவந்த எட்டா என்ஜி, கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் இருந்து வெளியேறினார். வசிக்க இடமின்றி தனது கனடா காதலியுடன் ஹாங் காங் நகரில் மேம்பாலத்துக்கு அடியில் தங்கி இருந்ததாக முன்னர் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

-athirvu.in