ஹிந்தியில் மட்டும் 2.0 புதிய மைல்கல் – பாலிவுட் நடிகர்களே அதிர்ச்சி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் நடித்துள்ள 2.0 படம் உலகம் முழுவதும் நவம்பர் 29 தேதி திரைக்கு வந்தது. அதுவும் 3 மொழிகளில் சுமார் 15000 திரையரங்குகளில் திரைக்கு வந்தது இந்த படம்.

தற்போதுவரை உலகம் முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்தே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஹிந்தி டப்பிங் பதிப்பு மட்டும் 100 கோடி ருபாய் வசூலித்துள்ளது என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

டப்பிங் படம் வெறும் 5 நாட்களில் இந்த சாதனையை செய்திருப்பது பல பாலிவுட் நடிகர்களுக்கே அதிர்ச்சியாகத்தான் உள்ளது.

-cineulagam.com