உலக தர வரிசையில் 9 வது இடம்: எட்டாத உயரத்தில் இன்று ஈழத் தமிழர்கள்..

இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி திரைப்படங்களில் எந்திரன் 2.0 க்கு 9 வது இடம் கிடைத்துள்ளது. இதுவரை காலமும் ஆங்கில திரைப்படங்களே அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் முதன் முறையாக தமிழில் எடுக்ப்பட்டுள்ள 2.0 சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலரில் தாரிக்கப்பட்டுள்ளதாகவும். அது உலக தர வரிசையில் 9வது இடத்தை பிடித்துள்ளதாகவும் வெப் களஞ்சியமான விக்கி பீடியா தெரிவித்துள்ளது. இதில் பெருமையான விடையம் என்னவென்றால் இதன் தயாரிப்பாளர் ஒரு ஈழத் தமிழர் என்பது ஆகும்.

சீனார்கள், பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் பல கோடி பேர் உலகில் வசித்து வருகிறார்கள். அவர்களும் பல மில்லியன் டாலர்களை செலவு செய்து திரைப்படங்களை தயாரித்து வருகிறார்கள். அவர்களே மூக்கில் விரல் வைக்கும் அளவு பெரும் பொருட் செலவில் 2.0 தாயாரிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படிக் கல்லாக பார்கப்படுகிறது. இந்த அளவு பொருட்செலவில் தமிழில் படம் எடுக்க முடியும் என்றால், லைக்கா நிறுவனம் ஏன் ஹாலிவுட் தயாரிப்பில் இறங்க கூடாது என்ற பேச்சுகளும் அடி பட ஆரம்பித்துள்ளது.

முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட லைக்கா நிறுவுனர் சுபாஷ்கரன் அவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருவதோடு. தமிழ் சினிமா துறையிலும் பெரும் நாட்டம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

-athirvu.in