ஜானி திரை விமர்சனம்

டாப் ஸ்டார் பிரஷாந்த் ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராயுடன் உலகம் முழுவதும் சுற்றி டூயட் பாடியவர். ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் சினிமாவிற்கு ஓய்வு அளித்திருந்தார், நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது ஜானி படத்தின் மூலம் பிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுக்க, ஜானி கைக்கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

பிரசாந்த் தன்னுடன் 5 பேரை சேர்த்துக்கொண்டு ரூ 2.5 கோடி பணத்தை கொள்ளையடிக்க நினைக்கின்றார், அவர்களும் அதே நோக்கத்தில் தான் இணைகின்றனர்.

ஆனால் பிரசாந்தோ அந்த மற்ற 4 பேரை எப்படியாவது கழட்டிவிட வேண்டும், அந்த பணத்தை தான் மட்டுமே கொள்ளையடிக்க வேண்டும், காதலியுடன் செட்டில் ஆகவேண்டும் என்று பிளான் செய்கின்றார்.

அதை தொடர்ந்து இந்த பிளான் ஒவ்வொருத்தருக்காக தெரிய வர அவர்களை பிரசாந்த் என்ன செய்தார், பணத்தை நினைத்தது போல் கொள்ளையடித்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

பிரசாந்த் நீண்ட வருடங்களாக ஒரு கம்பேக்கிற்காக காத்திருக்கின்றார். அதற்காக இந்த படத்தில் பழைய அளவிற்கு சாமிங், துள்ளல் இல்லை என்றாலும் கூட இருப்பவர்கள் கலாய்த்தாலும் திட்டினாலும் ஏற்றுக்கொள்கிறார். மீண்டு வாருங்கள் பிரசாந்த்.

சஞ்சிதா ஷெட்டி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார். இவர்கள் எல்லாம் விட ஆனந்த் ராஜ் அடிக்கும் கவுண்டர் தான் படத்தின் பலமே கலக்கியுள்ளார்.

பிரபுவும் தன் பங்கிற்கு கதாபாத்திரத்தில் வலு சேர்க்கின்றார். ஆனால், படத்தின் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் மிஸ்ஸிங்.

மேலும் மங்காத்தாவை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை, ஒளிப்பதிவு ஓகே லெவல் தான், இசையும் பெரிதும் கவரவில்லை.

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கின்றது.

ஆனந்த் ராஜ், பிரபு ஆகியோரின் நடிப்பு.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பு குறைவு.

இன்னும் கூட படத்தில் காமெடி இருந்திருக்கலாம்.

மொத்தத்தில் செம்ம சஸ்பென்ஸ் த்ரில்லர் இல்லை என்றாலும் டீசண்ட் த்ரில்லர் தான் இந்த ஜானி.

-cineulagam.com