கோலிவுட் சினிமாவில் வருடத்திற்கு 200 க்கும் அதிகமான படங்கள் எடுக்கப்படுகிறது. ஆனால் சில படங்கள் தியேட்டர் பிரச்சனைகளால் வெளியாகாமல் போய்விடுகிறது.
அதே வேளையில் ஒரே நாளில் அதிகமான படங்கள் சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையும் இருக்கிறது. இதனால் படக்குழுவுக்கு மட்டுமல்ல தயாரிப்பாளர்களுக்கும் சோதனை தான்.
மேலும் முக்கிய நடிகர்களின் படங்கள் கூட இப்படியான ஒரு நிலைக்கு வந்துவிடுகிறது. கடந்த வாரம் சீதக்காதி, மாரி2, KGF, அடங்கமறு, கனா என 5 படங்கள் வெளியானதே அது போல. இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், பட விநியோகஸ்தர்களுக்கும் சிக்கல் தான்.
இந்நிலையில் சென்னையில் முக்கிய திரையரங்கமான வெற்றி சினிமாஸ், கிறிஸ்துமஸ் பண்டிகை காலமாக அதிக படங்கள் வருகையால் வருத்தம் அளிக்கிறது.
குறைந்த எண்ணிகையிலான திரைகளில் மட்டுமே வந்தால் இப்படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் ஒட்டுமொத்தமாக குறைவு தான். உலகளவில் நஷ்டம் தான்.
அத்துடன் மக்களும் 10 நாட்களில் இத்தனை படங்களையும் பார்க்க முடியாது என கூறியுள்ளனர்.
-cineulagam.com