பழைய இயக்குனர்களுக்கு மணிரத்னம் அழைப்பு

‘பொன்னியின் செல்வன்’ படத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்துவிட்டார் மணிரத்னம். அவரது பல வருஷக் கனவாச்சே? விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிம்பு மட்டும் முடிவாகியிருக்கிறார்கள்.

இதில்தான் இந்திப்பட ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கும் ஒரு ரோல் ஒதுக்கி அவரை நுழைத்திருக்கிறார் மணிரத்னம்.

அவர் மட்டுமா, ஐஸ்வர்யாராயும் இருப்பாராம். 2019 நவம்பரில்தான் ஷுட்டிங்.

ஆனால் இந்த சரித்திரப் படத்திற்கான முன்னேற்பாடுகளுக்கே அத்தனை மாதங்கள் ஆகிவிடும் என்கிறார்கள்.

இப்போது இயக்குனராகிவிட்ட தன் பழைய உதவி இயக்குனர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறாராம் மணி.

சந்தை பெரிசு. சரக்கும் பெருசாச்சே?

-4tamilmedia.com