அதிர வைக்கும் தமிழ் ராக்கர்ஸ்! விஸ்வாசம் பேட்டை இரண்டும் வெளியானது இணையத்தில்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ படங்கள் நேற்று (ஜன.10) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 1090 தியேட்டர்களையும் இந்த இரு படங்களும் ஆக்கிரமித்துள்ளன. இருவரது படங்களும் சமமாக 450 முதல் 500 அரங்குகளிலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், எந்தப் படமாக இருந்தாலும், படம் ரிலீஸான அன்றையே தினமே அந்த படத்தை தங்களது இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்ட தமிழ்ராக்கர்ஸ் இன்று வெளியான பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்களையும் தங்களது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளன. இதனால், இரண்டு படங்களின் படக்குழு மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியல் உள்ளது.

ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இருவருமே போஸ்டர்கள், பேனர்கள் வைத்து தங்களது தலைவர்கள் படத்தை பெரும் பொங்கல் திருவிழாவாக கொண்டாடி வரும் நிலையில், தமிழ்ராக்கர்ஸில் படம் வெளியானதால் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

-athirvu.in