இணையத்தை மிரளவைத்த விக்ரமின் கடாரம் கொண்டான் டீசர்! டீசர் இணைப்பு!!

கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. #KadaramKondan #HappyPongal2019

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் `கடாரம் கொண்டான்’. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் இரவு விருந்தை முடித்த இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, படப்பிடிப்பு முடிந்துவிட்டது, ஒரு பாடல் மட்டும் பாக்கி இருப்பதாக தெரிவித்தார்.

தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார். இந்த டீசர் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவை செய்துள்ளார்கள். படத்தை வருகிற ஏப்ரல் 2019-ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #KadaramKondan #HappyPongal2019

-eelamnews.co.uk