நான் ஹீரோவானதற்கு இதுதான் காரணம்! -சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் பிடித்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த் என சக நடிகர்கள் மத்தியில் அவருக்கும் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

அதே வேளையில் அவர் பெரியாரின் கொள்கையை தீவிரமாக பின்பற்றுபவர். தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக இளையராஜா 75 என்ற விழா வரும் ஃபிப்ரவரி 2, 3 ல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அவருடன் பணியாற்றிவர்கள் பலரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்கள். இதில் சத்யராஜ் பேசுகையில் நடிகர், நடிகைகளின் வாழ்க்கையில் இளையராஜாவின் பங்கு மிகப் பெரிய அளவில் உள்ளது.

நான் நூறாவது நாள் படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தேன். அந்த கேரக்டர் அப்படியே மக்கள் மனதில் நிற்க காரணம் இளையராஜாவின் பின்னணி இசை தான்.

இப்படியாக கொடூரமான வில்லனாக இருந்த என்னை கடலோர கவிதைகள் படத்தில் ஒரு ஆட்டுக்குட்டியை கையில் வைத்துக் கொண்டு நான் நடித்ததை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றால் இளையராஜாவின் ரெக்கார்டிங்கில் இசையும் பாடல்களும் தான் காரணம் என கூறியுள்ளார்.

-athirvu.in