ராஜாவுக்கு செக் வைத்த சேரன் !

இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுப்பாக தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.

இதில் ராஜாவுக்கு செக் படம் எமோஷனல் திரில்லராக புதுவிதமான சேரனை நமக்கு காட்டும் படமாகத் தயாராகியுள்ளது. ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய  ராஜ்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். கொஞ்ச காலம் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுவிட்டு தற்போது சாய் ராஜ்குமார் ஆக மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

-nakkheeran.in