ஆந்திராவுக்கு சென்று சர்ச்சையை கிளப்பிய பிரபல தமிழ் பாடகர்!

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. எம்.ஜி.ஆர் காலம் தொட்டு இப்போது இருக்கும் நடிகர்களின் படங்களில் பாடி வருகிறது.

சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர் அண்மையில் ரஜினி நடிப்பில் வந்த பேட்ட படத்தில் பாடியிருந்தார். அண்மையில் ஆந்திராவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

அதில் அவர் சினிமா விழாக்களில் நடிகைகள் ஆபாசமாக உடை அணிந்து உடம்பை காட்டுகிறார்கள். எப்படியான உடை அணிய வேண்டும் என்ற உணர்வு இல்லை. அப்படி காட்சி பொருளாக காட்டினால் தான் விழாவுக்கு வரும் இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ வாய்ப்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறார்கள் என தெரியவில்லை என கூறினார்.

நமது கலாசாரம், சமூக உணர்வு எதுவுமே அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. நான் இப்படி பேசுவதால் நிறைய கதாநாயகிகளுக்கு கோபம் வரலாம். ஆனால் அவர்களுக்கு தெலுங்கு தெரியாது என கூறினார்.

இதனால் பெண்கள் அமைப்புகள் இதனை எதிர்த்து பேச விசயம் சர்ச்சையானது. இந்நிலையில் டிவி நிகழ்ச்சியில் இது விவாதமாக பேசப்பட்டது. இதில் சிலர் கலந்துகொண்டனர்,

அதில் எஸ்.பி.பி சொன்னதில் தவறில்லை. பெண்கள் கவர்ச்சியாக உடை அணிவதால் தான் பாலியல் கொடுமைகள் நடக்கிறது என்பதால் அவர் அப்படி கூறியுள்ளார் என கூறினர்.

இந்நிலையில் எஸ்.பி.பி வெளியிட்டுள்ள அறிக்க்கையில் எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தாலும் நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

-athirvu.in