விஜய்யால் கேரளாவில் ஏற்பட்ட சர்ச்சை!!

கேரளாவில் பிற மொழி படங்கள் தான் அதிக வசூலை ஈட்டுகிறது என்பது சமீப காலமாகவே இருந்து வருகின்ற நிலைப்பாடு தான். குறிப்பாக விஜய்யின் படங்கள் வசூலை குவிக்கின்றன. சமீபத்தில் கூட ஒடியன் படத்தை இயக்கிய ஷிரிக்குமார், விஜய் படங்களை தான் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்று கூறியிருந்தார். அவர் சொல்வது உண்மை என்பது போல விஜய்யின் சர்கார் படத்திற்கு இந்தியவிலேயே உயரமாக 175யில் கட் அவுட் கேரளாவில் வைக்கப்பட்டது.

தற்போது கேரள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜிடம், மலையாள நடிகர்களைவிட, தமிழ் நாட்டு நடிகர் விஜய்க்கு இருக்கும் வரவேற்பு குறித்து வருத்தத்துடன் ஒருவர் விமர்சித்தார்.

அதற்கு எம்.எல்.ஏ.ஜார்ஜ், மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு கேரளாவில் கூடுதலான ரசிகர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் திரையரங்குகள் முன் கூடி விஜய் கட்- அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர் என்று நேரடியாக கூறிவிட்டார். இது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-athirvu.in