தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை வளர்க்கிறது!

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை புறகணிக்கிறதா? என்ற வினாவுடன் ஒரு செய்தியை 10.3.2019-ஆம் தேதி மலேசிய இன்று வெளியிட்டிருந்ததது.

அதில், தமிழ் மொழி இல்லாத தமிழ் விழா அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ள  தேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின்போக்கு கண்டனதிற்கு உரியது என்று சாடப்பட்டிருந்தது.

இன்று கிடைத்த தகவலின் படி, சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் முழுமையாக தமிழில் உள்ள 15 பக்கங்கள் கொண்ட விழா அறிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது அறியப்பட்டது. (அறிக்கை    இணைக்கப்பட்டுள்ளது)

இந்தப் பணியின் வழி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை வளர்க்கிறது எனலாம். அதன் ஈடுபாடு பாராட்டத்தக்கது.

இந்த மன்றத்தின் ஆற்றல் வழி தமிழ்ப்பள்ளிகள் தமிழ் வழி கல்வி புகட்டும் தன்மை கொண்ட தளங்களாக என்றும் நிலைத்திருக்க இதில் உள்ளவர்கள் முனைப்பு காட்ட வேண்டும்.

தமிழ்பள்ளிகளுக்கான விழா அறிக்கை