உலகளவில் டிவி நிகழ்ச்சியில் வெற்றி தமிழ் பையனுக்கு கிடைத்த பரிசு இத்தனை கோடியாம்!

தொலைக்காட்சிகளுக்குள் இப்போதெல்லாம் கடும் போட்டி நிலவி வருகிறது. ரியாலிட்டி ஷோக்கள், ஆடல், பாடல் என போட்டி நிகழ்ச்சிகள் என புதிது புதிதாக வருகிறது.

சிபிஎஸ் சனாலில் தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பியானோ வாசித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் லிடியன் நாதஸ்வரம்.

13 வயதாகும் இவர் 2 வயதில் டிரம்ஸ் வாசிக்க தொடங்கினார். தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு கிடைத்த பரிசு ரூ 6 கோடியே 96 லட்சம்.

அதாவது 1 மில்லியன் டாலர். தென்கொரியாவை சேர்ந்த குக்கி வான் என சக போட்டியாளரை லிடியன் தோற்கடித்துள்ளார்.

-cineulagam.com