உறியடி-2 திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் பல இளைஞர்கள் சமுதாய பொறுப்புடன் திரைப்படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முதல் படத்திலேயே ஜாதி அரசியல் குறித்து அழுத்தமாக பேசி கவனம் ஈர்த்த விஜயகுமார், இந்த முறையும் கவனம் ஈர்த்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு விஜயகுமார் அவருடைய நண்பர் சுதாகர் மற்றும் ஒருவர் வேலை தேடி அலைகின்றனர். அப்போது சொந்த ஊரிலேயே கெமிக்கல் பேக்ட்ரி ஒன்றில் வேலைக்கு சேர்கின்றனர்.

அப்போது விஜயகுமார் நண்பர் ஒருவர் கெமிக்கல் தாக்கி உயிர் இறக்கின்றார். ஆனால், அதை ஒரு ஜாதி தலைவர் அரசியலாக்கி பணம் வாங்கிக்கொண்டு கம்பெனியை மீண்டும் துறக்க அனுமதி கொடுக்கின்றார்.

ஆனால், அதை தடுக்க வேண்டும் என விஜயகுமார், சுதாகர் போராட, அவர்களை கொல்லவே துணிகின்றனர். அதோடு கெமிக்கல் காற்றில் லேஸாக கலக்க, அதன் பிறகு நடக்கும் உணர்ச்சி போராட்டம் தான் உறியடி2.

படத்தை பற்றிய அலசல்

விஜயகுமார் எப்போதும் ஒரு சமூக பிரச்சனையுடன் தான் வருகின்றார், அதிலும் இந்த முறை தேர்தல் நேரம் என்பதால் போபால் விஷ வாயு தாக்குதல் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அதன் பின் நடந்த அரசியல், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு என அனைத்தையும் தோல் உரித்து காட்டியுள்ளார். அதற்காக அவருக்கு பாராட்டுக்கள், அதை விட இத்தனை தைரியமாக படத்தை தயாரித்த சூர்யாவிற்கும் பாராட்டுக்கள்.

ஒரு கெமிக்கல் பேக்டரி அதனால் மக்களுக்கு ஏற்படும் விளைவு தெரியாமல், அரசியல்வாதிகள் அவர்கள் சுயலாபத்திற்காக கண்டும் காணாமல் விடுவதனால், கேஸ் லீக் ஆகி காற்றில் கலப்பது போல் ஒரு காட்சி, தமிழ் சினிமாவின் பெஸ்ட் காட்சிகளில் அதுவும் ஒன்றாக சேர்க்கலாம்.

இடைவேளை முன்பு கம்பெனியில் இருந்த கேஸ் வெளியில் கலக்குமா? கலக்காதா? என்பதன் பதட்டம் நமக்கு வர, அதன் பின் அந்த கெமிக்கலால் மக்களுக்கு ஏற்படும் நோய், பாதிப்பு குறித்து காட்டிய 20 நிமிடம் நம் மனதை மிகவும் காயப்படுத்துகின்றது.

சட்டம் வேற, நீதி வேற, இது தான் நீதி, 500 அரசியல்வாதிகள் இத்தனை கோடி மக்களின் வாழ்க்கையை நீங்க யார் தீர்மாணிப்பது போன்ற வசனங்கள் செம்ம கூர்மையாக உள்ளது, படத்தின் ஒளிப்பதிவு எல்லா காட்சிகளும் லைவ்வாக பார்ப்பது போல் உள்ளது, இசை சென்சேஷன் இசையமைப்பாளார் கோவிந்த் வசந்த், பின்னணி நன்றாக இருந்தாலும், வயலின் சத்தத்தை கொஞ்சம் அடக்கியிருக்கலாம்.

-cineulagam.com