கடைசி படத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்த ஜே.கே.ரித்திஷ்…

நடிகரும், முன்னாள் திமுக எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் (வயது 46) கடந்த சனிக்கிழமை மாலை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு பல திரைபிரபலங்கள், அரசியல்வாதிகள் அஞ்சலி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் நடித்ததில் மக்களுக்கு பிடித்த கதாபாத்திரத்திம் என்றால் ரித்திஷ் கடைசியாக நடித்த படம் எல்.கே.ஜிதான். இந்த இதற்கு முன்பு இவர் நடித்திருந்தாலும் இவருக்கு ஏற்றார்போல ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரியாது. ரித்திஷின் மறைவையொட்டி ஆர்.ஜே. பாலாஜி குறிப்பிட்டிருப்பதாவது.

“சார், நான் உங்களை மிகவும் மிஸ் செய்வேன். என்னை உங்களுடைய சகோதரன் போலவே நடத்தினீர்கள். எல்.கே.ஜி படத்தில் நடிப்பதற்காக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. உங்களிடம் அதிகமாக பாசமும் நேசமும் இருந்தது. நீங்கள் மாமனிதர். உங்களின் மூன்று குழந்தைகளிடம் இருந்தும், அழகான குடும்பத்திடம் இருந்து கடவுள் பிரித்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதை நான் மிகவும் மோசமாக உணர்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ஆர்.ஜே. பாலாஜி.

-nakkheeran.in