“சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்”.. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு!

சென்னை: புதுக்கோட்டை மாவட்ட பொன்னமராவதியில் இருபிரிவுனருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கோபமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாக ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வைரலாகி வருகிறது.

ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது. போராட்டத்தின்போது பொன்னமராவதி காவல்நிலையம், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன. இது தொடர்பாக, 1,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 50 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் பேஸ்புக் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், ” சாதிவெறியர்களே உங்களுக்கெல்லாம் நான் ஒன்னு சொல்லிக்கிறேன்!

நீங்க பஸ்ல போறீங்களா ? அந்த பஸ் சோட டிரைவரோ , கண்டக்டரோ பறையனா இருக்கப் போறான் பார்த்துக்கோங்க.

என்னது உங்கப்பாவுக்கு ஹார்ட் ஆபரேசன் இரத்தம் வேனுமா? வேணான்டா கீழ் சாதிக்காரன் இரத்தம் ஏதாவது ஏத்திட போறான் அந்த டாக்டரு ! அப்படியே அந்த டாக்டரயும் என்ன சாதி னு கேட்டுக்க!

துணி எடுக்க கடைக்கு போறியா அந்த சேல்ஸ் வுமன் பொன்னு என்ன சாதி னு கேளு! அப்படியே அந்த துணிய நெய்தது வன்னியனா , பறையனா, தேவரா னு கேட்டுக்க , அப்புறம் அந்த கடை ஓனரு யாருனு கேட்டுக்க கீழ் சாதிக்காரனா இருக்கப் போறாரு!

அப்புறம் உன் முடியை நீயே வெட்டிக்க , இல்லனா வுட்ரு பெரிய மயிரா இருந்துட்டு போ!

இந்த கவர்மென்ட்டு பள்ளிக்கூடத்துல உங்க பசங்கல அனுப்பாதிங்க அங்க நெறைய பற பசங்க படிச்சி தமிழ வாழ வெக்கிறாங்க! அவங்க கை, கிய் பட்ற போகுது! தீட்டாயிடும்.

அப்புறம் அரிசி, பருப்பு, காய்கறி லொட்டு லொசுக்கு இதெல்லாம் வாங்கும் போது லேப்ல குடுத்து செக் பன்னி வாங்கிக்கோங்க

ஏன்னா? கீழ் சாதிக்காரன் எல்லாம் விவசாய கூலியா இருக்கிறான் அவன் கை , கால் ஏதாவது பட்டுருக்கும்.

இப்படிலாம் வாழ முடியும்னா வாழுங்க இல்லனா இருந்து மட்டும் என்ன சாதிக்க போறிங்க அதனால செத்துடுங்க”.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த பதிவை வெற்றிமாறம் தான் வெளியிட்டாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. அவருடைய பேஸ்புக் பக்கத்திலும் இதுதொடர்பாக எந்தவொரு பதிவும் இல்லை.

tamil.filmibeat.com