உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் நகர்வில் தமிழ்ச் சமய இரண்டாவது ஆய்வு அமர்வு 2019 நடைபெற்றது

கடந்த சூன் 22 காரிக்கிழமை, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் நகர்வில் தமிழ்ச் சமய இரண்டாவது ஆய்வு அமர்வு ஈப்போ புந்தோங் வள்ளலார் அன்பு நிலையத்தில் நடந்தேறியது.

குறிப்பிட்ட தமிழ்ச் சமய அறிஞ்சர்கள், ஆய்வாளர்கள் மட்டும் அழைக்கப் பட்ட இந்த அமர்வில் சைவ நற்பணி மன்ற தலைவர் திருமறை செம்மல் தமிழ்திரு தர்மலிங்கனார், தமிழ்திரு அறிவனார் தமிழ் வாழ்வியல் இயக்கத்தை சார்ந்த ஆய்வாளர்கள் திரு முருகையனார், திரு தமிழ்ச்செல்வனார் ஆகியோர் தலைமையேற்க பதிப்பாளராக ஆசிரியர் துரை.முருகன், மற்றும் இளங்குமாரன் அவர்கள் சிறப்பு வருகையளித்தனர்.

 

அமர்வு முறையே தொடக்கப் பிரார்த்தனை, தமிழ் வாழ்த்து, தேசிய கீதத்துடன் தொடங்கியது.

அனைவரையும் வரவேற்று பேசிய உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு வீ.பாலமுருகன் அமர்வின் நோக்கத்தையும் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டிய தமிழ்ச் சமயத்தின் தேவையும் விவரித்தார்.

தலைமையுரையாற்றிய ஏற்பாட்டுக் குழு தலைவரும் வள்ளலார் அன்பு நிலைய செயலாளருமான திரு க.கலையரசு அவர்கள் தமிழர் தேசியமும் தமிழ்ச் சமயமும் அதன் மூலமும் இலக்கும் நமது கடமையும் அதன் தெளிவும் மிக துள்ளியமாக விளக்கினார்.

பின்னர் ஐயா தமிழ்திரு தர்மலிங்கனார் உதவியுடன் தமிழ்ச் சமய வரையறை பட்டறைப் பற்றிய கட்டமைப்பு பதிவுகளை ஆய்ந்து முடிவெடுத்தனர். அதனுடன் தமிழ்ச் சமய நூல்கள், செயல் வடிவங்கள், வழிகாட்டிகள், அறிஞ்சர்கள், ஆய்வாளர்கள் மற்றும் 2018ஆம் ஆண்டின் தீர்மானங்கள் மீள் ஆய்வு போன்ற பல முன்னெடுப்புகள் ஒருங்கிணைக்கப் பட்பது.

பிறகு தமிழ்ச் சமய பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்த தமிழன் அவர்களின் நன்றியுரையுடன் திரு பாலமுருகன் வீராசாமி உறுதிமொழி வாசிக்க, அமர்வு இனிதே நிறைவுற்றது.