‘சிந்துபாத்’ விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து அடி: அந்த மனுஷன் பாவம்

சென்னை: விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான நிலையில் அதன் வசூலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அவரின் மகன் சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த சிந்துபாத் படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு ஒரு வழியாக நேற்று ரிலீஸானது. காலை காட்சிகள் ரத்தானதை பார்த்து ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

சிந்துபாத் பட ரிலீஸுக்கு விஜய் சேதுபதி பெரிதும் உதவி செய்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் படம் ரிலீஸான அன்றே அதை ஆன்லைனில் கசிய விட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

சிந்துபாத் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில் தமிழ் ராக்கர்ஸ் செய்த காரியத்தால் அதன் வசூல் பெரிதும் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. வார இறுதி நாட்களில் தியேட்டருக்கு சென்று சிந்துபாத் படத்தை பார்க்க நினைத்தவர்கள் கூட தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்துவிடுவார்கள்.

தமிழ் ராக்கர்ஸ் செய்யும் அட்டூழியத்தால் சிறு பட தயாரிப்பாளர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது எல்லாம் ஒரு படம் ரிலீஸானால் சில மணிநேரங்களில் அதை தமிழ் ராக்கர்ஸில் தேடும் பழக்கம் அதிகரித்துள்ளது.

பெரிய நடிகர்கள், சின்ன நடிகர்கள் என்று யாரையும் பார்க்காமல் அனைவரின் படங்களையும் ரிலீஸான சில மணிநேரங்களில் கசியவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ். தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் தள்ளிவிட்டுத் தான் அடுத்த வேலை என்று மார்தட்டிய விஷால் அது நடக்காததால் நைசாக அந்த பொறுப்பை தமிழக அரசின் தலையில் கட்டிவிட்டு நடிகர் சங்க வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் விஷாலுக்கும் பங்கு உள்ளது என்று முன்னணி தயாரிப்பாளர் தெரிவித்து அனைவரையும் அதிர வைத்தார். தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தமிழ் ராக்கர்ஸ் விஷயத்தில் மட்டும் ஏன் கண்டும் காணாதது போன்று உள்ளார் என்று தயாரிப்பாளர்கள் பலர் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் தான் தமிழ் ராக்கர்ஸின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.filmibeat.com