தேடி வந்த ரூ 10 கோடியை வேண்டாம் என ஒதுக்கிய பிரபல நடிகை! செமயான நேர்மை!

சினிமா நடிகைகள் சிலர் மிகுந்த உச்சத்தில் இருக்கிறார்கள். அதிக சம்பளமும் அவர்கள் வாங்குவார்கள். அதில் ஒருவர் நடிகை ஷில்பா ஷெட்டி.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் டாப் ஹீரோக்களுடன் நடிப்பவர். அத்துடன் வர்த்தக விளம்பரங்களில் நடித்து சம்பாதித்து வருகிறார்.

அவரை அண்மையில் உடல் இளைப்புக்கான மாத்திரை தயாரிக்கும் ஆயுர்வேத நிறுவனம் ஒன்று தங்கள் விளம்பரத்தில் நடிக்க வேண்டும் எனவும், ரூ 10 கோடி சம்பளம் தருவதாகவும், ஒல்லியான தோற்றத்தில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

ஆனால் நடிகை சற்றும் தயங்காமல், நேரம் எடுத்துக்கொள்ளாமல் நான் நடிக்கவில்லை, இந்த விளம்பரம் எனக்கு வேண்டாம் என கூறிவிட்டாராம்.

காரணம் அவருக்கு அதில் நம்பிக்கை இல்லாததோடு மாத்திரைகள் தற்காலிக தீர்வு தான், ஆனால் சரியான உணவை எடுத்துக்கொண்டு, தகுந்த உடற்பயிற்சி செய்தாலே உடல் நீண்ட நாள் தீர்வு என கூறிவிட்டாராம்.

-athirvu.in