ரஜினி வெங்கடாஜலபதி.. விஜய் அத்திவரதர்…! சீமான் பேச்சு!

ரஜினியுடனான அரசியல் சண்டை தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ள சீமான், சினிமாவில் ரஜினியை, விஜய் வீழ்த்தியது போல திருப்பதி வெங்கடாஜலபதியை அத்திவரதர் வீழ்த்தி விட்டதாக பேசியுள்ளார்

48 நாள் தரிசனத்திற்கு பின்னர் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பொதுக்கூட்டத்தில் முழங்கிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினியை வெங்கடாஜலபதியுடனும், விஜய்யை அத்திவரதருடனும் ஒப்பிட்டு பேசினார்.

தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கந்தசாமி படம் பாணியில் ஊர் ஊராக கோயில்கட்டி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி, பணம் வசூல் செய்வோம் என்றார்.

ரஜினி அரசியலுக்கு வர தயாராகி விட்டதால் சண்டை தொடங்கி விட்டதாகவும் அவரை எதிர்கொள்ள காத்திருப்பதாகவும் சீமான் அறிவித்தார்.

-https://athirvu.in