சூர்யா நடிப்பில் காப்பான் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் நாள் படம் குறித்து கலவையான விமர்சனங்களே வர, அடுத்தடுத்த நாட்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் அனைத்து இடங்களில் இருந்தும் வந்தது.
இதனால், சனி மற்றும் ஞாயிறு அன்று இப்படம் தமிழகத்தின் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகள் தான், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஒரு சில இடங்களில் எக்ஸ்ட்ரா சேர் எல்லாம் போட்டு படத்தை ஓட்டியுள்ளனர்.
இந்நிலையில் காப்பான் தமிழகத்தில் முதல் மூன்று நாட்களில் சுமார் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் சூர்யா கடந்த சில வருடங்களாக ஒரு பெரிய வசூல் கொடுக்க தடுமாற, காப்பான் அவரை காப்பாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படம் ரூ 40 கோடி தாண்டினாலே ஹிட் லிஸ்டில் இணைந்துவிடும் என கூறப்பட்டுள்ளது.
-athirvu.in

























