எதிரிவிமர்சனங்களுக்கு பதிலடி; ஜெயித்துக்காட்டிய காப்பான்!

சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் கடந்த இரு வாரங்களுக்கு முன் வெளியான படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இப்படம் விவசாயிகளின் வாழ்க்கையும், அரசியலை கைக்குள் போட்டுக்கொண்டு கார்ப்பொரேட் நிறுவனங்கள் செய்யும் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டியது.

முதல் நாள் கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்னர் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களே கிடைத்தன. விவசாயிகள் சங்கம் கூட இப்படத்திற்காக சூர்யாவை நேரில் சென்று வாழ்த்தியது.

இது ஒருபக்கம் இருக்க தாங்கள் தான் பாக்ஸ் ஆஃபிஸ் உச்சத்தில் இருக்க வேண்டும் மற்ற நடிகர்களை கடுமையாக விமர்சிக்கும் கூட்டத்திற்கு படக்குழு பொறுமையாக பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் படம் உலகம் முழுக்க ரூ 88 கோடி வசூல் ஈட்டியுள்ளது. தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியடைந்துள்ளார்.

-athirvu.in