ரஜினி, கமலுக்கு இல்லாத இந்த ஒரு விசயம் விஜய்க்கு இருக்கு!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இருவரும் இரட்டை குழல் நட்சத்திரங்கள் போல. இருவருக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

சினிமாவில் அவர்களுக்கு அடுத்தப்படியாக சொல்லப்படுவது அஜித், விஜய் தான். இதில் அஜித்தை தவிர மற்ற மூவரின் மீது அரசியல் பார்வை இருக்கிறது.

கமல்ஹாசன் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டார். ரஜினி விரைவில் வரவுள்ளார். அதே வேளையில் விஜய் வருவார் எனவும் அதற்கான அஸ்திவாரம் தான் மேடைகளில் அவரின் அரசியல் பேச்சு எனவும் சொல்லப்படுகிறது.

அண்மையில் அவர் பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசியது அரசியல் சர்ச்சையானது. இது குறித்து தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாதத்தில் விஜய் மீது கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய ஆர்.ஜே.ராஜவேல் ரஜினி, கமல் ஆகியோர்க்கு இல்லாத பெரும் ரசிகர்கள் கூட்டம் விஜய்க்கு இருக்கிறது. களத்தில் இறங்கி வேலை பார்க்ககூடிய சக்தி மிகுந்த இளைஞர்கள் அவரின் பின்னால் இருக்கிறார்கள்.

விஜய் அனிதா விசயம், ஜல்லிக்கட்டு போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்களுக்கு ஆறுதல் கூறியது என பலவற்றில் கலந்துகொண்டார்.

அவரின் காவலன், தலைவா, மெர்சல் என ஒவ்வொரு படங்களின் போது வெவ்வெறு முதல்வர்கள் இருக்கிறார்கள். அவரை பார்த்து அரசியல் வட்டாரங்கள் பயப்படுகின்றன.

அவருக்கு அரசியல் குறித்த தெளிவான திட்டமிடல் இருக்கிறது. அவர் முன்பே சொன்னது போல சர்க்கார் வரட்டும். அவரின் கொள்கைகளை சொல்லட்டும். அவரின் அரசியலை மக்கள் முடிவு செய்யட்டும். மற்ற கட்சிகளுக்கு அந்த தகுதி இல்லை என கூறியுள்ளார்.

-athirvu.in