சொன்னதை செய்த ரஜினி.. குவியும் பாராட்டு!

நடிகர் ரஜினிகாந்தை ஹீரோவாக தமிழ் சினிமாவில் பைரவி படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய கலைஞானம் அவர்களுக்கு தான் ஒரு வீடு வாங்கி தருவதாக ரஜினி இதற்கு முன்பே அறிவித்திருந்தார்.

சில மாதங்கள் முன்பு அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் ரஜினி இதை கூறினார். அவர் இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கிறார் என இதுநாள் வரை தெரியாமல் இருந்தது என உருக்கமாக பேசினார் ரஜினி.

இந்நிலையில் தான் சொன்னதை தற்போது அதை செய்தும் காட்டியுள்ளார் அவர். சென்னை விருகம்பாக்கம் பகுதியில் 45 லட்சம் ருபாய் விலையுள்ள வீடு வாங்கி கொடுத்துள்ளார் ரஜினி. நேற்று காலை அந்த வீட்டுக்கு சென்று குத்துவிளக்கு ஏற்றி வைத்துள்ளார் ரஜினி.

-athirvu.in