படித்து முடித்த வாத்தியாரை விட படித்துக் கொண்டிருக்கும் வாத்தியார்கள் தான் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு தேவை.
இதுதான் திரைக்கு வந்திருக்கும் அடுத்த சாட்டை படத்தின் கதை.
கல்லூரி பேராசிரியருக்கும், மாணவர்களுக்கும் உள்ள உறவைப் பற்றிய திரைக்கதை.
இன்றைய கல்வியில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருந்தால் மாணவர்களுக்கு நல்லது என்பதை குணச்சித்திர நடிகர் சமுத்திரக்கனியின் மூலம் சொல்லியிருக்கிறார் முந்தைய சாட்டை படத்தின் இயக்குனர் அன்பழகன்.
8 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்து ஜனரஞ்சக வெற்றி பெற்ற படம் சாட்டை. அதன் இரண்டாம் பாகமாக இப்படத்தை எடுத்திருக்கிறார் அறிமுக தயாரிப்பாளர் பிரபு திலக்.
காவல்துறையில் ஓய்வு பெற்ற உயர் பெண் அதிகாரி திலகவதியின் மகன் பிரபு திலக் டாக்டர். சமூக விழிப்புணர்வு படம் எடுக்க வேண்டும் என்ற உணர்வில் நண்பர் சமுத்திரக்கனியின் உதவியோடு திரைக்குள் வந்திருக்கிறார் பட அதிபர் அந்தஸ்தில்.
சமுத்திரக்கனி, தம்பி ராமையா, அதுல்யா ரவி, யுவன், கவுசிக், ராஜஸ்ரீ பொன்னப்பா நடித்திருக்கிறார்கள்.
ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைப்பாளர். ராசா மதி ஒளிப்பதிவாளர்.
கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்கள், சமுதிரக்கனி மீது மாணவர்கள் தனிப் பாசம், கல்லூரி முதல்வர் தம்பி ராமையாவின் வக்ர புத்தியில் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடும் கல்லூரிப் பேராசிரியர்கள், கையில் கயிறு கட்டி தங்களை இன்ன ஜாதி என்று அடையாளம் காட்டும் மாணவர்கள் பேராசிரியர்கள், இலங்கை மாணவன் விபத்தில் விபரீத மரணம் … இப்படி நகர்த்தும் காட்சிகளின் முடிவில் ராமையாவுக்கு சரியான பாடம் புகுத்தி
இந்தத் தலைமுறைக்கு சமுத்திரக்கனி மாதிரி மாணவர்களோடு தோள் கொடுத்து நிற்கும் தோழமை மனப்பான்மை பேராசிரியர்கள் ஆசிரியர்கள் தான் தேவை என்று அறிவுறுத்தும் ஜனரஞ்சக கதை.
சினிமா மோகத்தில் கலை உலகில் கால் பதித்திருக்கிறார் பிரபு திலக். இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு படம் தந்து இருக்கிறார் என்பதை அங்கீகரித்து பிரபு திலக்கை மனம் திறந்து பாராட்டலாம்.