மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்களின் மத்தியில் உணர்வுடனும் உணர்ச்சியுடனும் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தன்னை பெரும்மளவு அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் கலைமுகிலன். இவர் உட்பட 12 நபர்கள் சோஸ்மா என்ற சட்டத்தின் கீழ் கைது கடந்த 10.10.2019-இல் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
கலைமுகிலனின் தந்தை அர்ஜுணன், நோய்வாய் பட்டு ஒரு காலை இழந்து படுத்தப்படுக்கையில் தனிமையில் வாழும் அர்ஜுணன் அளித்த பத்திரிகை செய்தியில் காவல் துறையின் போக்கையும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் வன்மையாக சாடியுள்ளார்.
எம்.எசு அர்ஜுணன் என்றால் பிகேஆர் கட்சியின் ரிபோமாசி போராளி, பேராக் செண்டிரியாங் சட்டமன்ற பிகேஆரின் முன்னாள் வேட்பாளர். இண்டராப்பின் போராளி இப்படி பல அரசியல் பிரமுகர்களுக்கும், மக்களுக்கும் நன்கு அறிமுகமான இவரின் செய்தி தொகுப்பு வருமாறு.
தன் மகன் கலைமுகிலன் மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவராகவும், கேயடிலான் கட்சியின் கெப்போங் தொகுதி முன்னாள் தலைவராகவும் இருந்தவர்.
தந்தையும் தமையனுமாக தமிழ்மொழி, தமிழர் இனம்,தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் என தங்கள் வாழ்வை ஒரு அற்பணிப்பு கொண்ட தன்மையில் வாழ்ந்து வருபவர்கள்.
கலைமுகிலன் (வயது 30) சென்ற ஆண்டு திருமணம் முடித்து பொதுச்சேவையில் தொடந்து பணியாற்றி வரும் ஒரு துடிப்பான இளைஞர்.
உலகத்தமிழர் பாதுகாப்பு மா நாடு , தமிழ்மொழி மீட்சி மாநாடு போன்ற இன்னும் பல தமிழர் சார்ந்த நிகழ்வுகளுக்கு வற்றாத ஆதரவு தந்த பல உறவுகளில் கலைமுகிலன், பாலமுருகன், ஆசிரியர் எழிலன், அறிவேந்தன், குணா, சாமி நாதன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களுக்கும் எல்டிடிஇ (LTTE) என்ற இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காவல் துறையும் உள்துறை அமைச்சும் சட்டத்துறையும் ஏதோ அரைகுறை விசாரணையில் என் மகன் கலைமுகிலனை சிறையில் அடைத்து வைத்துள்ளது தப்பாக நான் கருதுகிறேன் என்கிறார் அர்ஜுணன்.
பிரதமர் மகாதீர் சொன்னது போல இவர்கள் எந்த அதிரடி தீவிரவாத அமைப்போடோ , துப்பாக்கி சண்டையோ, கஞ்சா கடத்தலோ, திருடோ நடத்தவில்லை. வெறும் போக்ஷ்டர், படம் வைத்திருந்தால் தீவிரவாதம் என்பது தப்பாகும்.
இவர்கள் தமிழ்மொழி தமிழரின உரிமை போராட்ட போராளிகள் என்பதுதான் உண்மை.
1982 கு பிறகு இலங்கையின் வட மாநிலம் தமிழ் ஈழம் என்றாகி தமிழின தலைவன் மேதகு பிரபாகாரன் தலைமையில் தமிழர்கள் தனி சிறு அரசு ஆட்சியே நடத்தினார்கள் என்பதும் வரலாறுதான்.
2009ல் நடந்த இறுதி உள் நாட்டு இனப்போர் வரை, சுமார் 29 ஆண்டுகள் தமிழ் ஈழம் தமிழர்களின் அரசு, அரசியல் கோட்டையாக விளங்கியது.
ஏக்கத்தை யார்தான் தாங்க முடியும்?
பத்தாண்டுகளுக்குப்பிறகு மலேசியப்போலீசுக்கு ஞானதோயம் பிறந்துள்ளது போல! சம்பந்தமே இல்லாத என் மகன், என் தோழர்களை தீவிரவாதிகள் என்று விசாரணையின்றி தடுத்து வைத்துள்ளர்.
சும்மா சாக்கு போக்கு அரசியல் தனத்திற்கு பேப்பர், பில் , போஸ்டர், புத்தகம் வைத்திருந்தால் சோஸ்மா என்றால் மில்லியன் மக்களும் சோஸ்மா சிறையில்தான் இருக்க வேண்டும் என்று நான் யூகிக்கிறேன் என்கிறார்.
போராளி என்பவன் மண் உரிமை, இன உரிமை,மொழி கலை, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம், காக்கத்தானே போராடுகிறான்.இதுதானே சுதந்திரம், சட்டம், சன நாயகம் என்று உலக அரங்கு நகர்கிறது.
“நான் பார்த்த, சந்தித்த தற்போது சோசுமாவில் இருக்கும் 12 பேரும் தீவிரவாதிகள் அல்லர். இதில் என் மகன் கலைமுகிலனை நான் எம்மினத்தின், என் தமிழ் மொழியின் தொண்டனாக, வீரனானா போராளியாகத்தான் வளர்த்தேன்.”
“ஒரு போதும் தமிழ்ப்பள்ளிகளில் அவன் தீவிரவாத போதனைகளை கற்றதில்லை.”
“இவர்களைப் போலவே சுப்ரா, பாலமுருகன், ஆசிரியர் எழில், அறிவேந்தன், தீரன், மாண்புமிகு குணா , சாமி நாதன், இன்னும் பல உறவுகள்.
இவர்களை காப்பாற்ற இப்போது மக்கள் நீதிக்காக ரோட்டில் நிற்பதும், அரசியல் சதியை நினைத்து வெதும்பி நிற்பதை பார்ப்பதற்கு மிகவும் துயரமாக இருக்கிறது.”
“ஏன்? இலங்கை சண்டைக் காலத்தில் கே. பி. ராஜாவை கைது செய்து இலங்கைக்கு அனுப்பிய அரசுதானே! நிதியாக அமெரிக்க டோலர் ஒரு மில்லியன் வழங்கி உதவியதும் மலேசிய அரசுதானே!
கப்பல் கப்பலா துணிமணிகள் , சாப்பாட்டுப் பொருட்கள் வாங்கி அனுப்பியதும் மலேசியத் தமிழர்கள்தானே!
சுனாமி வெள்ள நிவாரணப் பணிக்கு மாபெரும் கலை நிகழ்ச்சிப்போட்டு நிதி திரட்டியதும் மலேசியாதானே!”
“இறுதியாக, பி டி ஆர் எம் மதிப்புமிகு டத்தோ மைடின் கான் அவர்களுக்கும் ஐஜிபிக்கும் சட்டத்துறை தலைவருக்கும் இந்நாட்டின் மூத்த குடிமகன் என்ற உரிமையில் வேண்டுகோளை முன் வைக்கிறேன்.”
“இவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்” என்று எம்.எசு அர்ஜுணன் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய செய்தியில் தம் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
(செய்தி சேகரிப்பு பொன்ரங்கன்)