கடந்த வருடம் வெளிவந்த தமிழ் படங்களின் மொத்த வசூல் என்ன தெரியுமா? பிரமிக்க வைக்கும் சாதனை

கடந்த வருடம் 2019ம் ஆண்டு தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம். பல படங்கள் ஹிட், வர்த்தக ரீதியிலும் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது.

அந்த வகையில் பிகில், விஸ்வாசம், பேட்ட, காஞ்சனா3, நேர்கொண்ட பார்வை, கைதி ஆகிய படங்கள் ரூ 100 கோடி வசூலை கடந்த படங்கள்.

இதில் பிகில் ரூ 300 கோடி, பேட்ட ரூ 200 கோடி வசூலை தொட்டுள்ளது, இந்நிலையில் தமிழ் சினிமாவின் கடந்த வருட பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டும் மொத்தம் ரூ 1500 கோடிகளை தாண்டும்.

அதோடு டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் இதையெல்லாம் கணக்கிட்டால் தமிழ் சினிமாவின் வர்த்தகம் ரூ 2000 கோடிய கடந்த வருடம் எட்டியிருக்கும் என கூறப்படுகின்றது.

கண்டிப்பாக வர்த்தக ரீதியில் கடந்த வருடம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று அடித்துக்கூறலாம்.