நடிகைகளை பதற வைக்கும் டிவி நடிகை

டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகள் யாரும் இதுவரை ஜொலிக்கவில்லை. ஆனால் வாணிபோஜன் அதற்கு விதிவிலக்காகியிருக்கிறார். தெய்வமகள் சீரியலில் நடித்த வாணிபோஜன் தற்போது சினிமாவில் பரபரத்துக்கொண்டிருக்கிறார். ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுடன் நடிக்கும் அவர் அடுத்து லாக்அப் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படங்கள் வெளிவருவதற்கு முன்பே அடுத்து அதர்வா ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இது கோலிவுட்டில் உள்ள சில ஹீரோயின்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி வயிற்றில் புளியை கரைத்திருக்கிறதாம்.