தனது படத்துக்காக விட்டுக்கொடுத்த சந்தானம்

சந்தானம் நாயகனாக நடித்துள்ள, ஓடி ஓடி உழைக்கணும் என்ற படம், பாதி முடிந்த நிலையில், சம்பள விவகாரத்தால் முடங்கியது. இப்படத்தில், சந்தானம் நடித்து முடித்து, படம் விற்பனை ஆனதும், சம்பளத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என, தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்ற சந்தானம், அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதேபோல், மற்ற நடிகர்களும் சம்பள விவகாரத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும் என, தயாரிப்பாளர்கள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.