த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் ஓரளவுக்கு அவருக்கு பெயரை பெற்றுத் தந்தாலும் இன்னும் ஆனந்தியால் முதல் வரிசைக்கு வரமுடியில்லை.
தற்போது அவர் நடித்து வரும் ஹீரோயின் சப்ஜெக்ட் படமான கமலி பிரம் நடுக்காவேரி அவரை முதல் வரிசைக்கு கொண்டு வரும் என்கிறார்கள். ராஜசேகர் துரைசாமி என்ற புதுமுகம் இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஆனந்தியுடன் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தீனதயாளன் இசை அமைத்திருக்கிறார், ஜெகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் ஏப்ரல் 17ந் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் ராஜசேகர் துரைசாமி கூறியதாவது: காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்புவது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும் என இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி. அவள் இந்த இரண்டையும் சரியாக அடைந்தாளா என்பதுதான் கதை.
ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்படும் ஹைடெக் காதல் கதை. கமலியாக நடித்திருக்கும் ஆனந்தியின் நடிப்பு படம் வந்தபிறகு எல்லோராலும் பாராட்டப்படும். இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததும், கதையை கேள்விப்பட்டதும் உலக உரிமையை மாஸ்டர்பீஸ் என்கிற கம்பெனி வாங்கி உள்ளது. என்றார்.
dinamalar