கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்

பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், 6-வது முறையாக பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது.

பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நட்சத்திர ஓட்டலிலும் தங்கி இருந்தார். பின்னர் அவருக்கு உடல் நிலை குன்றியதால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள். கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்தினர்

கொரோனா நோயாளிகளுக்கு 48 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை நடத்தப்படும். கனிகாவுக்கு 5 முறை பரிசோதனை செய்தும் கொரோனா தொற்று இருப்பதையே உறுதிப்படுத்தியது. தற்போது 6-வது முறையாக பரிசோதனை செய்தனர். அதில்  அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை முடிவுகள் வெளிப்படுத்தின. இதையடுத்து அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டிலேயே ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கனிகா கபூருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

malaimalar