அஜித் ரூ.1.25 கோடியை உதவித் தொகையாக அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தை ஆதரித்து பிரபலங்கள் பலரும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மத்திய மற்றும் மாநில அரசின் நிவாரண நிதிகளுக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அஜித் குமாரும் அந்த நட்சத்திர வரிசையில் இணைந்துள்ளார். அவர் மொத்தமாக ரூ.1.25 கோடியை உதவித் தொகையாக அளித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் PM Cares நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நன்கொடை அளித்துள்ள அவர், மேலும் தென்னிந்தியத் திரைப்பட தொழிளார் சம்மேளனத்திற்கு (FEFSI) ஊழியர்களின் நலனுக்காக ரூ. 25 லட்சம் கொடுத்துள்ளார்.

அஜித்தின் இந்த செயலைப் பாராட்டி தமிழக தகவல் மற்றும் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தமிழகத்தின் முன்னணி நடிகராக உள்ள அஜித், தாமாக முன் வந்து 1.25 கோடி ரூபாய் பணத்தை கொரோனா பேரிடர் நிதியாக கொடுத்திருக்கிறார். இதற்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரைப் பின்பற்றி கலைத் துறையில் உள்ள மற்றவர்களும் முன்வந்து நிவாரண நிதி கொடுத்திட வேண்டும்,” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, FEFSI-க்கு ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி,  சிவகுமார் குடும்பம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கலைப்புலி எஸ். தானு, யோகி பாபு, நயந்தாரா உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

‘தல’ அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://movies.ndtv.com/tamil