கொரோனா நிவாரண நிதி வழங்கிய அட்லீ

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ, கொரோனாவால் வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்காக நிவாரண நிதி வழங்கி உள்ளார்.

அட்லீ, கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பீதியால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. பல்வேறு திரைப்பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் அட்லீ ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார். இதில் ரூ.5 லட்சம் பெப்சிக்கும், ரூ.5 லட்சம் இயக்குனர்கள் சங்கத்திற்கும் வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இயக்குனர் அட்லீ அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

malaimalar