சுங்காய் சட்டமன்ற உறுப்பினர், ஜசெகாவைச் சேர்ந்த சிவனேசனின் பத்திரிக்கை செய்தியை பார்க்கும்போது, அவர் ஒரு முதலாலித்துவவாதி என்பதும், முதலாலிகளின் குரல் போல் தெரிகிறது என்கிறார் . மலேசிய சோசலிசக் கட்சியின் துணை தலைவர் அருட்செல்வம். அவரின் செய்தி:
மறைந்த டிஏபி தலைவர்களான வி.டேவிட் மற்றும் பி. பட்டு போன்றவர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால் சிவனேசனின் இந்தச் செய்தியை பார்த்து வெட்கப்பட்டு தலைக்குனித்திருப்பர். மக்களுக்கு சாதகமில்லாத சட்டத்தை பேசும் சிவநேசனின் இந்த செய்தியால் தோட்டப் பாட்டாளிகளின் போராட்டாம் பின்னடையுமே தவிர அவர்களின் வாழ்வாதரா மேம்பாட்டிற்கு பயனளிக்கப் போவதில்லை.
அந்தப் பத்திரிக்கை செய்தியில் அவர் தொழிலாளர்களை சந்தித்ததாக கூறியிருக்கிறார். தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் இருளில் வாழும் அனைத்து தொழிலாளர்களையும் தான் சந்தித்ததாகக் கூறியிருப்பது விசித்திரமாக இருக்கிறது. ஒருவேளை இருட்டில், சிவனேசன் யாருடன் பேசுகிறார் என்பது அவருக்கே தெரியவில்லை போலிருக்கிறது.
சிவநேசன் பத்திரிக்கை செய்தியின் சுறுக்கம்
- தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உறவு சட்டம், பிரிவு 20 – இது வேலை நிறுத்தம் தொடர்பான சட்டமாகும். இதற்கும் வீட்டுப் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதிலிருந்தே நமக்கு தெரிகிறது அவருக்கு பிரச்சனை என்னவென்று புரியவில்லை என்பது. இங்கே பிரச்சினை தொழிலாளர்களின் பணிநீக்கமில்லை, மாறாக தோட்டத் தொழிலாளர்கள் கோருவது மாற்று வீடாகும்.
போலீஸ் புகார்கள் – தொழிலாளர்களின் வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் வெட்டுவதை ஒரு குற்றச் செயலாக சிவநேசன் கருதவில்லை. ஆனால், நாங்கள் அதை ஒரு குற்றமாக கருதியதால்தான் அதற்கு நீதி கோரி போலீச் புகார்கள் செய்தோம். இந்தச் செயல், அரசியலமைப்பு சட்டத்தில்குறிப்புட்டுள்ள 5-ஆவது பிரிவின் கீழ், வாழ்வுறிமைக்கு எதிரானது. மேலும், அனைத்துலக மனித உரிமை சட்டத்திற்கும் புரம்பானது. தோட்டப் பாட்டாளிகளின் வீட்டுறிமை போராட்டத்திற்கு அங்கீகாரம் கொடுக்க நாங்கள் நினைக்கிறோம், ஆனால் சிவநேசனோ அவர்களின் போராட்டத்தை இதுபோன்ற பத்திரிக்கை செய்தியின் மூலமாக இழிவுப்படுத்துகிறார். எங்களைப் பொறுத்தவரை தொழிலாளர்களின் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை வெட்டுவது குற்றமாகும், அது மக்களின் நல்லிணக்கத்திற்கும் மிரட்டலாக இருக்கிறது.
தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வேலைக்காலம் முடித்தவுடன், அவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சிவநேசன் பார்க்கிறார். இது ஒரு குறுகிய பார்வை. முதலாளிகளை பிரதிநிதிக்கும் வழக்கரிஞர்களின் குரலாகவே சிவநேசன் தெரிகிறார். தோட்டத்தில் வேலை செய்யும் வரைதான் தொழிலாளர்கள் தோட்ட வீடுகளில் இருக்க உரிமை உண்டு என்று அவர் கூறுகிறார். ஆனால் இந்த சிந்தனையை நாங்கள் போராட்ட மூலமாகவும், சட்டரீதியாகவும் என்றோ வென்றெடுத்து விட்டோம். சிலாங்கூர், செமினியிலுள்ள பாங்கி தோட்ட விவகாரத்தில், தோட்ட முதலாளி தொழிலாளர்களை தோட்டத்திலிருந்து வெளியேற்ற உரிமையில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, மேலும் அப்படி செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாங்கி தோட்டத்தில் வேலைக்காலம் முடிந்தவுடம் தோட்டத் தொழிலாளர்கள் வீட்டை காலி செய்தால்தான் அவர்களின் சேவைக்கால பணம் கொடுக்கப்படும் என்று தோட்ட நிர்வாகம் கூறியது. ஆனால், தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சனைக்கும், மாப்பா-என்.யூ.பி.டபல்யு ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. இதேபோலத்தான் டெனுடின் மற்றும் செமினி தோட்டத் தொழிலாளர்களும் பணி ஓய்வு பெற்ற பின்பும், சிலர் சொக்சோ உதவிப் பணத்தில் வாழ்க்கையை ஓட்டியும், தொழிலாளர்களுக்கு மாற்று வீடு கட்டிக் கொடுக்கும் வரை அவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறவில்லை.
சட்டத்தைப் பொறுத்தவரை, பிரிவு 7 தொழிலாளர்களின் சிறப்புச் சட்டத்தின் கீழ், நீதிமன்ற உத்தரவின் மூலம் மட்டுமே தொழிலாளர்களை வெளியேற்றப்பட முடியும் என்று கூறுகிறது. எனவே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டிக்கும் செயல் சட்டவிரோதமானது. இதைத்தான் எதிர்த்து சமூக செயற்பாட்டாளர்களும், மனித உரிமை வழக்கறிஞர்களும் போராடுகிறார்கள், ஆனால் இது வழக்கறிஞர் சிவநேசனுக்கு புரியவில்லை. தொழிலாளர்கள் போராட்டத்தை பி.எஸ்.எம் உயர் மட்டத்திற்கு கொண்டு வருகிறது. 4 தலைமுறையாக தோட்டத்தில் உழைக்கும் தொழிலாளர்களின் போராட்டத்தையும் அவர்களின் தியாகத்தையும் பி.எஸ்.எம் உயர்வாக பார்க்கிறது, பாராட்டுகிறது. தோட்டத் தொழிலாளர் சமுதாயத்தை ஒரு இயந்திரமாகவோ அல்லது வேலைக்கு உதவும் முதலாளித்துவ கருவியாகவோ பி.எஸ்.எம் பார்க்கவில்லை, மாறாக அவர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சொத்து!
1974-ஆம் ஆண்டில் துன் அப்துல் ரசாக் கொண்டுவந்த தோட்டத் தொழிலாளர்கலுக்கான வீட்டுறிமை கொள்கையை சட்டமாக கோரி வருகிறது பி.எஸ்.எம். மாண்புமிகு சேவியர் சிலாங்கூரில் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த போது, அவர் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனையை கையாள்பவராக இருந்தார். பக்காத்தான் அரசாங்கமான அவரிடமிடம் இந்த கோரிக்கையை முன்வைத்த போது, அவரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், அதே பக்காத்தான் ஆட்சியில் சிவநேசன் போன்ற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். இவரை போன்றவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் நல்லதுக்காக போராட வேண்டும் என்ற உறுதியை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் தோட்டத் தொழிலாளர்களின் பல சிக்கல்கள் பி.எஸ்.எம் மூலம் கையாளப்படுகின்றன. தொழிலாளர்கள் பி.எஸ்.எம்-யை நம்புகிறார்கள். பி.எஸ்.எம் கடைசி வரை அவர்களுடன் இருப்பார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். தோட்ட மக்களிடத்தில் பி.எஸ்.எம்-மின் வெற்றி பரவலாக அறியப்படுகிறது. அதோடு, பி.எஸ்.எம் மலேசியாவில், பொதுவாக தோட்ட தொழிலாளர்கள் சமூகத்தின் முக்கிய போராளியாக அறியப்படுகிறது.
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவதில் பி.எஸ்.எம் உண்மையாகவும் உறுதியுடன் உள்ளது. பி.எஸ்.எம் ஈடுபாட்டின் காரணமாக, பல தோட்டத் தொழிலாளர்கள் இன்று இலவச வீடுகளையும் பெற்றிருக்கிறார்கள். இதில் 4 புத்ராஜெயா தோட்டங்களும் அடங்கும்.
இவை அனைத்தும் பேசப்படவேண்டியவை. காரணம் பி.எஸ்.எம் தோட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்து போராடுகிறார்கள். அவர்களுக்கு பின்னாலிருந்து இல்லை.
பல தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்னையை எதிர்நோக்கினால் பி.எஸ்.எம்- மை நாடுகிறார்கள். அவர்கள் பேராக் மாநில ஜ.செ.காவை நாடவில்லை. ஏனெனில் தோட்டத் தொழிலாளர்களுக்கு பி.எஸ்.எம் மட்டுமே தெரியும். தற்போதைய சிவநேசனின் பத்திரிக்கை அறிக்கை முதலாளிக்கு ஆதரவாக இருப்பதை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
தற்போது நம்முன் இருக்கும் பிரச்னை மலாக்காஃப் போன்ற ஒரு பெரிய ராட்சச முதலாளிக்கு எதிராக ஏழைகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்க விரும்பாத நிலையில் மலாக்காஃப் சமீபத்தில் 101% லாபத்தை பதிவு செய்தார்கள் என்பதும் குறிப்பிடதக்கது. அவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி செய்துகொடுக்க விரும்பவில்லை.
தோட்டத் தொழிலாளர்களுடன் பி.எஸ்.எம் நிற்கிரது, மலாக்காஃப் மாதிரியான முதலாளிகளுடன் சிவநேசன் நிற்கிறார் என்பதை மக்கள் காணலாம்.