தீவிரவாதத்திற்கு முன்னோடி இனவாதமாகும்!

இரயன் சுவா (KOMAS) – அன்மையில் மலேசியாவில் இயங்கும் கோமாஸ்  (KOMAS) என்ற மனித உரிமை சார்புடைய அமைப்பு தனது 10 வது தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. மெய்நிகர் கூட்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில் ‘இனவாதம் தீவிரவாதத்தைத் தூண்டுகிறதா?’ எனும் தலைப்பில், பல இன மக்கள் வாழும் தற்போதைய மலேசியா சூழலில் – சமூக மற்றும் தேசிய நல்லிணக்கம் குறித்து பேசப்பட்டது.

இந்த மாநாடு இனவாதம் என்ற தலைப்பில் பங்குதாரர்களை ஈடுபடுத்தியதுடன், இனவெறி எந்த அளவிற்கு தீவிரவாதத்தை நிலைநிறுத்துகிறது என்பதை ஆய்வு செய்தது.

மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்  அகமது ஷாஹீத், ‘தீவிரவாதத்திற்கு முன்னோடி இனவாதம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வை கோமாஸ் இயக்கத்தின் தலைவர் ஜெரால்டு ஜோசப் வழிநடத்தினார்.

திரு ஷாஹீத்தின் வார்த்தைகளில், ‘தீவிரவாதம் என்பது ஒரு அதிகாரத்தைப் கைப்பற்றுவது. அது ஒரு கருத்தோ அல்லது ஒரு பார்வையை வெளிப்படுத்துவதைப் பற்றியது அல்ல மாறாக அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு செயல் திட்டமாகும்.

இதனால் அவர்கள் ஒரு உறுதியான அதிகாரத்தை அடைய முடியும். தீவிரவாதிகள் உலகளாவிய மனித உரிமைகளை நிராகரிக்கின்றனர். மற்றவர்களின் உரிமைகள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து எந்த பச்சாதாபமும் காட்டுவதில்லை. அவை பன்முகத்தன்மையையும் பன்மைத்துவத்தையும் பாதிக்கின்றன.

தீவிரவாதிகள், தாங்கள் எது இயற்கையான ஒழுங்குமுறை என கருதும் இனவாதம், நம்பிக்கை, இனப்பற்று அல்லது பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூக அமைப்பை நிறுவ முற்படுகிறார்கள்.

அந்த குறிப்பில், ஷாஹீத், இனவெறியை தீவிரவாதத்தின் முன்னோடியாக பார்க்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். அரசியலின் பல்வேறு அம்சங்களில் இனவாதம் தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக, மேலாதிக்க அரசியல், அவர்கள் அரசியல் சமத்துவத்தை நிராகரித்து ஆதிக்கத்தை நாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அந்தச் செயல்பாட்டில், தீவிர வலதுசாரிக் கட்சிகள், அதிகாரிகள், மத அடிப்படைவாதிகள்  ஒடுக்கப்பட்டவர்களை ஓரங்கட்டப்படுதலுக்கும், அவமானப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றனர். இது வன்முறையை உருவாக்குகிறது.  அரசியல் மற்றும் அரசியல் நிறுவனங்களில் இனவெறி மற்றும் பாகுபாடு ஆகியவை பெரிய அளவிலான அட்டூழியங்களைத் தூண்டும் மற்றும் நீடிக்கும் .

மேலும்  மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும். அரசாங்கம் இனவெறியைத் தடுக்காமல் விட்டுவிட்டால், மக்கள் நாட்டின் ஆட்சி மீதான நம்பிக்கையை இழந்து, மற்ற தரப்புகளை நாடி செல்வதுடன் அதிகாரத்தையும் மாற்ற விரும்புவர்.

எனவே நீடித்த பாகுபாடு சமூக ஒற்றுமை மற்றும் தேசிய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் தேசத்தின் வளர்ச்சினையை உயர்த்தும் முயற்சிகளையும் குறைக்கும்.

ஆதலால், மலேசியாவில் இனவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் தேவை; இனவாதத்தை கையாளாமல் விட்டுவிடுவது தீவிரவாத போக்குகளின் வளச்சிக்கு வழிவகுக்கும். அதற்கான பரிந்துரைகள் முன்மொழியப்பட்டன:

  1. ஒரு பன்மைத்துவ சமுதாயத்தின் குடிமக்கள் என்ற வகையில், நாம் இன எல்லைகளுக்கு அப்பாற்பட்டவகையிலும் நமது கவனத்தை செலுத்த வேண்டும். ஒருவர் மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், தொடர்பு கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் தொடங்க வேண்டும்.
  1. யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். எனவே அரசியல்வாதிகள் இன,மதவாத தூண்டுதலுக்கு எதிரான சட்டங்களை பின்பற்றிவதை கடுமையாக்க வேண்டும். அவ்வாறான தூண்டுதல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். மேலும், இனவாத அரசியலை தவிர்ப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
  1. சமூக ஒற்றுமையை கட்டியெழுப்ப, அனைத்துலக அளவில் நிர்மாணீக்கப்பட்ட இனவாதம் மற்றும் மதவாததிற்கு எதிரான கொள்கைகள் மற்றும் விதிகளை உள்நாட்டு சட்டவிதிகளுடன் ஓருங்கிணைக்க வேண்டும்.
  1. எல்லா தரப்பிணரும் மனம் திறந்து விவாதம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
  1. வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை (SDG) உள்ளடக்கிய மேம்பாட்டுக் கொள்கைகள் கட்டாயமாகும். இக்கொள்கைகள் பாகுபாட்டையும் இனவாத்தைதையும் ஆதரித்தால் ஆகாது. அவைகளுக்கு அப்பால் செயல்பட வேண்டும். அனைவருக்குமான அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அரசு மதிக்க வேண்டும். இதன்வழி கலாச்சார, இன மற்றும் மத பன்முகத்தன்மை ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  1. அமைதியான நாட்டை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு அவசியமானது. அவர்களின் எழுத்து எவ்வாறு ஒற்றுமை கருவாகவோ அல்லது வேற்றுமைக்கு வித்திடுவதாகவோ அமைகிறது என்பதை ஊடகங்கள் அறிந்திருக்க வேண்டும்.
  1. உடனடி தீர்வாக, ஊடக நுகர்வோர் சிந்தனை தெளிவுடன் முதிர்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டியது அவசியம். உணர்ச்சியை தூண்டுதலுக்கு வசப்படக்கூடாது.
  1. எவ்வாறாயினும், இனவாத்தை ஒழிக்க நீண்டகால தீர்வு வேண்டும். இனவாதம் மற்றும் மதவாத அடிப்படையில் இயங்கும் மலேசியாவில்,  சாமானிய மக்களின் ஒருங்கிணைபாலும் அவர்களின் விழிப்புணர்வாலும் மட்டுமே  இது சாத்தியமாகும் சூழல் அமைகிறது. என்வே இது ஒவ்வொரு மனிதனின் கடமியாக அமைகிறது.

குறிப்பு:  வரும் 22 மார்ச் 2021 அன்று நடைபெறவுள்ள கோமாஸ்  (KOMAS) அமைப்பு தனது 10 வது தேசிய மாநாட்டின் இரண்டாம் பாகத்தில் பங்கேற்க பொதுமக்களை வரவேற்கிறது. இரண்டாம் பாக சொற்பொழிவுகளில் மலேசியா, இன மற்றும் மத அரசியலின் தீவிரவாதம் தொடர்பான உள்நாட்டு பிரச்சினைகள்  மற்றும் சமூகத்தில் இன பாகுபாட்டின் விளைவுகள் குறித்து பேசப்படவுள்ளது.               தொடர்பு எண்: 0379685415