நிரந்தர தீர்வு காண வேண்டுமே தவிர பொம்மலாட்டங்கள் தேவை இல்லை

மலேசிய சிறுபான்மை இந்திய ஹிந்துக்களின் மனித உரிமை மீறல்களை அர்ச்சகர்களின் துணைக் கொண்டு திசை திருப்பும் போக்கை ஹிண்ட்ராப் மக்கள் சக்தி வண்மையாக கண்டிக்கிறது.

ஹிந்து அர்ச்சகர்களையும் , மலேசிய ஹிந்து சங்கத்தையும் முன்னிறுத்தி பாரிசான் அரசை போலவே பக்காத்தான் அரசும் நாட்டாமை அரசியல் நாடகம் ஆடுகிறது.

ஹிந்து ஆலயங்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமே தவிர பொம்மலாட்டங்கள் தேவை இல்லை.

கடந்த 8/12/2011 அன்று 3 மலேசிய முன்னனி தமிழ் நாளிதழ்களில் பக்காத்தான் கவுன்சிலர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் மலேசியவின் மூத்த அர்ச்சகர் ஒருவரையும், மலேசிய ஹிந்து சங்கத்தையும் முன்னிறுத்தி வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக என் கருத்தை பதிவு செய்கிறேன்.

மலேசிய ஹிந்துக்களை பாதிக்கும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து , பக்காத்தான் அரசின் பொம்மலாட்ட கூத்தின் கைப்பாவையாக முத்துக்குமார் செயல் பட்டிறுக்கிறார்.

ஆகம விதிகளுக்கு ஏற்ப்ப கட்டப்படாத ஆலயங்களை ஹிந்துக்கள் ப்றக்கனிக்க வேண்டும் என்ற முத்துக்குமாரின் கூற்று அறிவுப்பூர்வமானதாக எற்றுக்கொள்ளப்பட கூடியதல்ல.
ஹிந்து சமயம் என்பது ஆகம விதிகளை மட்டுமே அடிப்படையாக கொண்டதல்ல மாறாக மனிதனின் அன்றாட வாழ்வியல் முறைகளையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்பதை முத்துகுமார் ஒரு அர்ச்சகர் என்ற வகையில் அறியாமல் போனதை நம்மால் ஏற்க்க முடியவில்லை.

தமிழகத்தில் உள்ள  ஆயிரக்கனக்கான கிராமங்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்ட நம்பிக்கைகளை பாரம்பரியமாக பெற்றிருக்கின்றன. அவ்வாறான கிராமங்களிள் இருந்து மலேசியாவிற்க்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் இங்கும் அவர்களின்  பூர்வீக நம்பிக்கைகளுக்கு ஏற்ப்ப ஆலயங்களை நிறுவி வழிபட்டு வருகின்றனர்.

உடுப்பூர் காட்டில், திருக்காளத்தி மலையில் , குடுமிதேவருக்கு பன்றி இறைச்சி படைத்து, இறைவனின் திருவருளை பெற்ற திண்ணன் எந்த ஆகம முறையை பின்பற்றி 63 நாயன்மார்களுள் பெரிதும் போற்றப்படும் கண்ணப்பனார் ஆனார்? திண்ணனின் திடமான நம்பிக்கை, மாசற்ற அன்பு, முதிர்ந்த பக்தி இவற்றின் முன் எந்த ஆகம விதிகள் நிற்க்க முடியும் என்று முத்துக்குமார் நினைக்கிறார்? இந்த வரலாற்றை உதாரணமாக கூறினால் உடனே கண்ணப்பரும் இவர்களும் ஒன்றா என்பார்கள். எப்படி முத்துகுமார் ஒன்றும் தேவகுரு பிரகஸ்பதி கிடையாதோ அதேபோல் இவர்களும் கண்ணப்பர் கிடையாதுதாம் , ஆனால் திண்ணனிடம் இருந்த திடத்தைப்போல் மற்றவர்களுக்கு இருக்க கூடாது என்று யாரும் கூற முடியாது. முத்துக்குமார் கூறும் ஆகம விதிகளுக்கு அப்பாற்ப்பட்ட  இதுபோன்ற ஆயிரமாயிரம் சம்பவங்களை உள்ளடக்கி கொண்டிருப்பதுதான் ஹிந்து சமயத்தின் தொண்மை.
கண்ணப்பரின் வரலாற்றை உலகில் நம்புபவர்களை காட்டிலும் நம்பாதவர்களே அதிகம் என்பதால் எப்படி அவரை நாயன்மார்கள் பட்டியலிலிருந்து நீக்கமுடியாதோ அப்படி இந்த ஏழை ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும் ஒதுக்கிவிட முடியாது.

வசதியற்றவர்கள் அவரவர்தம் வசதிக்கேற்றப்படி ஏதோ சிறிய அளவில் ஆலயங்களை அமைத்து வழிபட்டு வருகின்றனர். ஏழைகள் என்பதாலோ , குடிசை போல் தோற்றமளிப்பதாலோ அவர்களின் நம்பிக்கையோ ஆலயங்களின் புனித தன்மையை பற்றியோ கேள்வி எழுப்ப முத்துக்குமார் போன்றோர்களுக்கு எவ்விதமான தார்மீக கட்டாயமும் கிடையாது.

இன்று உலகம் போற்றும் பத்து மலை ஆலயம் ஒன்றும் ஆகம விதிப்படி  துவங்கப்பட்டதல்ல. மாரான் மரத்தாண்டவர் கோவில் விக்கிரஹ பிரதிஷ்டைகளுடன் வேத ஆகமப்படி தோன்ன்றியதல்ல.வசதியான , மேல் தட்டு மக்கள் செல்லும் ஆலயம் என்பதால் முத்துக்குமார் போன்றோர் அந்த ஆலயங்களுக்கு எதிராக அறிக்கை விடமாட்டார்கள்.

மலேசியாவில் காட்டை அழித்து நாட்டை உறுவாக்கிய பாட்டாளி தமிழன் தோற்றுவித்த எந்த ஆலயமும் முத்துக்குமார் கூறும் வேத ஆகமப்படி தோன்றியதல்ல. அவரின் கூற்றுப்படி பார்த்தால் அவர் குடமுழுக்கு செய்வதற்க்கு இன்று நாட்டில் ஆலயங்களே இறுந்திருக்காது.

1948ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமை பிரிவு 18 தனி நபரோ அல்லது ஒரு சமூகமோ அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலான  சமயத்தை பேனுவதற்க்கோ , வழிபடுவதற்க்கோ உரிமை அளிக்கிறது. இதன் அடிப்படையில் இந்த ஏழை ஹிந்துக்களின் சமய உரிமை தனி சுதந்திரம் என்பதோடு சர்வதேச ஜனநாயகப்படியும்  பாதுகாக்கப்பட வேண்டும்.

முத்துக்குமாரும், மலேசிய ஹிந்து சங்கமும் பக்காத்தான் அரசுக்கு கைபாவைகளாக செயல் பட்டு, தமது எஜமானர்களை திருப்தி படுத்தும் நோக்கதிற்க்காக  ஏழை ஹிந்துக்களை மேலும் வஞ்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஹிந்து சமயத்திற்க்கு எதிரான அரசியல் வாதிகளுக்கு கைப்பாவையாக செயல் படுவதால் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் கேடுகளுக்கு இவர்கள் துணை போகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

1970 முதல் மேம்பாடு என்று சாக்குச் சொல்லி ஆயிரக்கனக்கான தோட்டங்கள் துன்டாடப்பட்டு சுமார் 10 லட்சம் இந்தியர்கள் எவ்விதமான நஷ்ட்ட ஈடும் கொடுக்கப்படாமல் தோட்டங்களில் இருந்து விரட்டி துரட்டியடிகப்பட்டார்கள்.அவர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிப்போன சமய சம்பிரதாயங்களை தொடர்ந்து மேற்க்கொள்வதற்க்கு அரசாங்கத்தால் எத்தகைய வசதிகளும் ஏற்ப்படுத்தி தரப்படாத சூழலில் தரிசு நிலங்களிள் சிறிய சிறிய ஆலயங்களை நிறுவி வழிப்பட்டனர்.

துவக்கத்திலேயே இந்த அநீதிகளுக்கு அரசாங்கம் நியாயமாக நடந்து வஞ்சிக்கப்பட்ட ஏழை இந்திய தோட்ட பாட்டாளிகளுக்கு வீட்டு வசதி , ஆலயங்கள், தமிழ் பள்ளிகளுக்கு நிலம் மற்றும் ஏனைய சமூக கட்டமைப்புகளையும்  ஏற்ப்பாடு செய்து தந்திருந்தால் இது போன்ற பிரச்சனைகள் நிகழ்ந்திருக்காது என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

இந்தியர்களின் அபரிமிதமான ஒதுழைப்புடன் 4 மாநிலங்களை ஆட்சி புரியும் பக்காத்தான் அரசியல் கட்சிகள் பாரிசானின் 54 ஆண்டுகள் அநியாயத்திற்க்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமே தவிர , பாரிசானைப் போலவே நாட்டாமைகளை முன்னிருத்தி பொம்மலாட்டம் நடத்தி நளிந்த இந்தியர்களின் பிரச்சனைகளை திசை திருப்பி , ஹிந்து ஆலயங்கள் சட்ட விரோதமானவை என பொறுப்பில்லாமல் ஒதுக்குவதை உடனே நிருத்த வேண்டும்.

பொ. வேதமூர்த்தி
தலைமை
ஹிண்ட்ராப் மக்கள் சக்தி

TAGS: