கோயில் போராட்டத்தில் விவேகமற்ற வீரம்!

[சமூகநலன்விரும்பி : க]

25 ஆண்டுகளுக்கு முன் ம.இ.காவால் கைவிடப்பட்ட கோயில் பிரச்னையைத் தீர்த்து வைத்துள்ள இன்றைய பக்காத்தான் மக்கள் கூட்டணி அரசுக்கும் குறிப்பாக டாக்டர் சேவியர் சட்டமன்ற உறுப்பினர் ரோசியா, நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் மற்றும் மந்திரி புசார் காலிட் இப்ராஹிம் அவர்களுக்கும் இப்பகுதி வாழ் மக்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்கின்றேன்.

இன்றைய கோயில் நிர்வாகமும் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற செல்வாவும் பாராட்டுக்குறியவர்கள். மாநில அரசு இப்பொழுது வழங்கியுள்ள இடம் மிக அருமையாக அமைந்துள்ளது. 20 இலட்சம் வெள்ளி மதிப்புள்ள நிலத்தை வழங்கி சுமார் 3 இலட்சம் வெள்ளி செலவில் நில மற்றும் அடிப்படைக் கட்டட மேம்பாடுகளைச் செய்துள்ளது.

இப்பகுதி ஒரு ம.இ.கா. வின் சட்டமன்ற உறுப்பினராக S.S. சுப்ரமணியம் இருந்த வேளையில், PKNS வாரிய உறுப்பினராக ம.இ.காவின் பிரதிநிதியும், PKNS-ல் நிறைய இந்திய பணியாளர்கள் இருந்த வேளையில் மேம்பாட்டுக்கு எடுத்துக்கொண்ட ஒரு தோட்டத்தின் கோயிலுக்கு மாற்று இடமில்லை, மானியமில்லை. மாறாக அப்பகுதியில் கோயில் இருந்த இடம் உட்பட வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதனால் கோயில் கட்டடத்தை விட்டு கோவிலை சுற்றி PKNS-ல் வீடுகள் கட்டப்பட்டு, கோயிலுக்கும் அங்கு குடியிருக்கும் மக்களுக்கும் பெரும் சச்சரவை ஏற்படுத்தியது.

எல்லோருக்கும் திருப்திகரமான ஒரு தீர்வைத்தேடி மாற்று இடத்தை இன்றைய மாநில அரசு ஏற்படுத்திக் கொடுத்தபோது அதனையும் தடுக்க மாட்டுத்தலை ஆர்பாட்டத்தை நடத்திய ஷா ஆலாம் அம்னோ தொகுதித் தலைவர் சகோதரின் செயல், விவகாரத்தை இனப் பிரச்னையாக உருவெடுப்பதை தடுக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் மந்திரி புசாரையும் நாடாளுமன்ற உறுப்பிரையும் ஏசியும் கிண்டல் செய்த அம்னோ உறுப்பினர்கள் மற்றும் அவர்களை கட்டித்தழுவி அவர்கள் செயலை தொலைகாட்சியில் நியாயப்படுத்திப் பேசிய உள்துறை அமைச்சர் ஹிஷா மூடின், ஆர்பாட்டக்காரர்களை காப்பாற்ற தனது வீட்டில் கூட்டம் கூட்டிய ம.இ.கா முன்னாள் இளைஞர் பகுதி தலைவர் விக்னேஸ்வரன், அதில் கலந்துக் கொண்டு விசயத்தை திசை திருப்ப முயன்ற ராமாஜி, ரகு போன்றவர்களும் வாயில் அவல் வைத்திருந்த ம.இ.கா-வின் இன்னாள் இளைஞர் பகுதி தலைவர் மோகன் மற்றும் ஆர்பாட்டக்காரர்களுக்குச் சட்ட உதவி வழங்க பாடுப்பட்ட தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் நோ ஒமார், இன்று ஒதுக்கப்பட்டுள்ள இடம் தொழிற்சாலை கழிவு வீசும் இடம் என்று புறணி பேசியே மக்களை மடையர்களாக்கும் HRP உதயக்குமார் போன்ற அறிவு மேதைகளின் செயல்களும் இச்சமுதாயத்தை அடகு வைத்தே வளர்த்துவிட்ட ம.இ.கா பிண்டங்களின் துரோகங்களையும் நினைவுபடுத்த கட்டப்பட்ட கோயிலாக இது விளங்கும். ஷா ஆலாம் செக்சன் 23லிருந்து ஸ்ரீமூடா செல்லும் வழியில் இது உள்ளது.

TAGS: