தமிழ் அறவாரியத்தின் உஷாராணி காலமானார்

தமிழ் அறவாரியத்தின் உதவித்தலைவரான உஷாராணி சர்குணவேலு நேற்று காலமானார். சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் தொடர்ந்து தனது பணிகளை மேற்கொண்டிருந்ததாக கூறப்பட்டது.

தமிழ் அறவாரியத்தின் தொடக்கம் முதல் அதில் தன்னை பெருமளவு ஈடுபடுத்திக்கொண்ட அவர், தமிழ் அறவாரியத்தின் “வருடாந்திர நிகழ்வான, ‘அனைத்துலக தாய்மொழி தின’ கொண்டாட்டங்களுக்கு  சீன,  மலாய், தமிழ் மற்றுமல்லாமல் பிற மொழி குழுக்களையும்  ஒருங்கிணைத்து நிகழ்ச்சிகளை உருவாக்கிய பெருமை அவரையேச் சாரும்.

தமிழ்ப்பள்ளியில் பயிலாத அவர் தமிழ்மொழி மீதும் தமிழ்ப்பள்ளிகளுக்கான திட்டங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.

அவரின் மறைவு தமிழ் அறவாரியத்திற்கு ஒரு பெரும் இழப்பாகும்என்கிறார் தமிழ் அறவாரியத்தின் தலைவர் எம். மனோகரன்.

அவரின் பூதவுடல் இன்று காலை பூச்சோங் மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது.