உதயகுமார் வில்லனா அல்லது ஹீரோவா அல்லது இரண்டுமா? [எஸ்.தயாபரன்]

“பெரும்பாலும் படைப்பாற்றலைக் கொண்ட அர்ப்பணிப்பு உணர்வுடைய சிறுபான்மையினரே சிறந்த உலகை உருவாக்கியுள்ளனர்”-மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர்

இந்த நாட்டில் நீதிக்கும் சம நிலக்கும் நடத்தும் போராட்டத்தில் பி உதயகுமார் வில்லனா அல்லது ஹீரோவா அல்லது இரண்டுமா என நீங்கள் கேட்கலாம்.

2008ம் ஆண்டு அரசியல் சுனாமிக்குப் பின்னர் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களித்த ஒவ்வொருவரும் நம்பிக்கை வாக்குறுதி ஆகியவற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பொது மக்கள் கவனத்தை ஈர்த்த ஹிண்ட்ராப் கை மேலோங்கியிருந்தது ? நீண்ட காலமாக தேவைப்பட்ட மாற்றங்களுக்கு இந்திய சமூகம் வழி கோலும் என எதிர்பார்க்கப்பட்டது.

உதயகுமாரும் அவரது இளைய சகோதரர் வேதமூர்த்தியும் கடைப்பிடித்த இனவாத அம்சங்கள் குறித்து கவலை தெரிவித்த சிலர் புறம் தள்ளப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிண்ட்ராப் ஒர் இனவாதக் கட்சி எனக் குறை கூறப்படுகிறது. ஹிண்ட்ராப் அலையில் நன்மை அடைந்த முக்கிய எதிர்க்கட்சிகள் அதனை தீண்டத்தகாத அரசியல் பறையானாகக் கருதுகின்றன. புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுவதற்கு அது இடையூறாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.

எதிர்த்தரப்புக் கூட்டணியில் இணைந்துள்ள மாறுபட்ட சித்தாந்த, சமயப் பிரிவுகளுக்கு பொதுவான மேடையாக விளங்கும் பல பண்பாட்டு ‘முஹிபா’ உணர்வுக்குள் தங்களது சொந்த இனவாத போக்கை மறைத்து வைத்துள்ள பக்காத்தானுக்குள் உள்ள இனவாதிகள் வழக்கமாக கக்கி வரும் ‘இனவாத’ முத்திரையை ஹிண்ட்ராப் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

நீண்ட காலத்துக்கு முன்பு சமூக ஒப்பந்தத்தை சீர் குலைக்கும் நோக்கம் கொண்ட சீன மேலாதிக்கக் கட்சி என முத்திரை குத்தப்பட்டது பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை. டிஏபி சமநிலைக்கும் நீதிக்கும் போராடியது, அதன் பேச்சுக்கள் காரணமாகவும் அதன் உறுப்பியத்தைக் கருத்தில் கொண்டும்  இனவாதமாகக் கருதப்பட்டது.

சமூக, அரசியல் பிரச்னைகளை இன அடிப்படையில் அணுகும் போது விளையக் கூடிய பிரச்னையே இதுவாகும். பல இனப் போர்வையில் மறைந்து கொண்டிருக்கும் குறை கூறுகின்றவர்களுக்கு அது எளிதான வழியைக் காட்டி விடுகிறது. இன அடிப்படையிலான குறைகளைக் காட்டிலும் சட்டப்பூர்வ சமூகத்தின் பிரச்னைகள் மேலானவை என அவர்கள் வாதாடுகின்றனர்.

அண்மையில் நான் சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் டி ஜெயகுமாரைப் பேட்டி கண்டேன். அவர் அப்போது சொன்னார்; “ஹிண்ட்ராப் ஒர் இயக்கம் என்ற முறையில் கடந்த காலத்தை ஆய்வு  செய்வதை அடிப்படையாக கொண்டுள்ளது. சமூகத்தை இனவம்சாவளி ஆய்வுக்கு அது உட்படுத்துகிறது. அதனை மஇகா அல்லது பெர்க்காசாவிடமிருந்து வேறுபடுத்துவதற்குச் சித்தாந்த ரீதியில் ஏதுமில்லை. என்றாலும் பெர்க்காசாவைப் போன்று ஹிண்ட்ராப் ஒர் ‘இனவாத அமைப்பு’ என அர்த்தம் கொள்ளக் கூடாது. பல பண்பாட்டு சமூகத்தை உருவாக்கும் நாட்டு நிர்மாணத்துக்கு நீண்ட காலம் நிலைத்திருக்கும் தீர்வை வழங்குவதற்கு ஹிண்ட்ராப்பின் இன அடிப்படை கண்ணோட்டம் தடையாக மட்டுமே விளங்குகிறது.  அதே வேளையில் இன அடிப்படையிலான பெர்க்காசா கண்ணோட்டம் தீய நோக்கம் கொண்டது. மலாய்க்காரர் அல்லாதாருடைய பாதுகாப்புக்கு (சில மலாய்க்காரர்களுக்கும் கூட ) மருட்டலை ஏற்படுத்தியுள்ளது.”

இதனை வேறு வகையாகச் சொன்னால் நோக்கம், இனவாதத்தை வரையறுக்கிறது.

குழப்பமான சிந்தனை

ஹிண்ட்ராப் இயக்கத்துக்கும் அதன் உரிமம் பெற்ற மனித உரிமைக் கட்சி போன்ற அமைப்புக்களுக்கும்  இன்னும் என்ன எஞ்சியிருக்கிறது என்பதை உதயகுமாரே இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

‘இனவாதிகள்’ என பிஎன் -னையும் பக்காத்தானையும் வருணித்துள்ளதின் வழி உதயகுமார் தமது போராட்டத்தை கற்பாறைக்கும் கரடுமுரடான தளத்துக்கும் இடையிலான அரசியல் வியூகமாக நிலை நிறுத்தியுள்ளார்.

நீங்கள் அதனை நினைத்துப் பார்த்தால் அது நீண்ட கால வியூகமாகக் கருத முடியாது. என்றாலும் அதனை ஆய்வு செய்தால் ஹிண்ட்ராப் போராட்டம் பிஎன்- னைக் காட்டிலும் பக்காத்தானுடன் அல்லது அதனுடன் இணைந்துள்ள அமைப்புக்களுடன் பொதுவான சித்தாந்தத்தை கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது.

இந்திய சமூகம் எதிர்நோக்கும் சமூகப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு அம்னோ ஆட்சி நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாக அண்மையில் மலேசியாகினிக்கு எழுதியுள்ள கடிதத்தில் உதயகுமார் இவ்வாறு கூறுகிறார்: ” இந்திய ஏழைகள் உட்பட அனைத்து ஏழைகளுக்கும் ஆதரவான நடவடிக்கைகளை ஏன் எடுக்கக் கூடாது?” எல்லாவற்றுக்கும் மேலாக நாம் ஒரே மலேசியாவாக அல்லவா இருக்க வேண்டும். நாம் ‘பல இனமாகவும்’ இருக்க வேண்டிய தேவையும் இல்லையா?”

உதயகுமார் அவர்களே, இன அடிப்படை இல்லாத வர்க்க அடிப்படையிலான தீர்வுக்கு நீங்கள் உண்மையில் யோசனை கூறுகின்றீர்களா?

“சில காலமாகவே ஜெயகுமாரும் அவரைப் போன்ற மற்ற போராளிகளும் அதனைத் தானே வலியுறுத்தி வருகின்றனர். அதே மக்களை நீங்கள் “இந்திய மேல் வர்க்கத்தினர், போலி சோஷலிசவாதிகள்” என நீங்கள் முத்திரை குத்தியுள்ளீர்கள். ஹிண்ட்ராப் அலையில் நன்மை அடைந்தவர்களும் பக்காத்தான் போராட்டங்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளவர்களும் அவர்களே.”

மலேசியாவில் இந்தியர்கள் இன, சமூக, பொருளாதார ரீதியில் ‘துடைத்தொழிக்கப்படுவதாக’ உதயகுமாரும் வேதமூர்த்தியும் பேசும் போதும் அதே மாதிரியான குழப்பம்தான் தொடருகிறது.

அந்தத்  ‘துடைத்தொழிக்கப்படும்’ நடவடிக்கையால் துயரத்தை அனுபவிப்பது இந்தியர்கள் என அவர்கள் சொல்வதுதான் தவறு. மாறாக தீவகற்ப மலேசியாவில் உள்ள ஒராங் அஸ்லி மக்களே அந்தத் துயரத்தை அனுபவிக்கின்றனர்.

ஹிண்ட்ராப்-பின் தீவிரமான இனவாத நிலையால் ஏற்படும் பிரச்னையே இதுவாகும். இந்திய சமூகத்திற்கு அல்லது குறைந்த பட்சம் முக்கிய சமூக நீரோடையிலிருந்து வேண்டுமென்றே ஒதுக்கப்பட்ட இந்திய சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கு நிகழ்ந்துள்ள நல்லதற்கும் கெட்டதற்கும் அதுவே காரணம்.

இந்தியர்கள் பிளவுபடும் போது அம்னோ நன்மையடைகிறது

அண்மையில் மெர்தேகா மய்யம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு இந்திய சமூகத்தின் நடப்பு அரசியல் எண்ணங்களைத் துல்லிதமாகக் காட்டுகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. என்றாலும் புக்கிட் செலாம்பாவ், பாகான் பினாங்கு, உலு சிலாங்கூர் ஆகிய இடைத் தேர்தல்கள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். இந்தியர்களிடைய தேவைகளை நிறைவு செய்வதற்கு பிஎன் வகுத்துள்ள திட்டங்கள் – அங்கீகாரம், கோயில்கள், தமிழ்ப் பள்ளிக்கூடக் கல்வி ஆகிய அம்சங்களில் இந்தியயர்கள் ‘விரும்புவதை’ கொடுக்கும் திட்டங்கள்- பலனளிக்கத் தொடங்கியுள்ளதாக தோன்றுகிறது.

‘புனிதமான மாடுகளை வெட்டுவது’ என்னும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் அந்தத் “விருப்பங்கள்” குறித்து நான் ஆட்சேபம் தெரிவித்திருந்தேன். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஹிண்ட்ராப் அதனைத்தான் வலியுறுத்தி வருகிறது. அல்லது ‘இந்தியர் பிரச்னை’ எனக் கூறும் போது அந்த சூடான பலூன்களையே அது பயன்படுத்தியுள்ளது.

அம்னோ பிஎன் அத்துமீறல்கள் பற்றி உதயகுமார் நிறையப் பேச முடியும் என்றாலும் இந்தியர்கள் விரும்புவதை பிஎன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு தேவையானதை அல்ல. அவர்கள் விரும்புவது எல்லாம் இவ்வளவு காலமாக ஹிண்ட்ராப் போராடி வருவதாக கூறப்படும் விஷயங்களும் அதேதான்.

ஹிண்ட்ராப் உண்மையில் கட்டுக்கோப்பான அரசியல் அமைப்பாக இருந்தது இல்லை. பல்வேறு அரசு சாரா இந்திய அமைப்புக்களின் கூட்டுக் கலவையாகும். அந்த இயக்கம் இப்போது பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. அவை ஒவ்வொன்றும் அம்னோ பல்வேறு அளவுகளில் அம்னோ வழங்கும் தாரளமான நன்கொடைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. இந்திய சமூகத்துக்காக பேசுவதாக அவை ஒவ்வொன்றும் கூறிக் கொள்கின்றன. அதே வேளையில் மஇகா மீண்டும் புத்தெழுச்சி பெறுவதற்கு பின்னணியில் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்திய சமூகத்திலும் அதனைப் பிரதிநிதிப்பதாக் கூறிக் கொள்ளும் பிரிவுகளுக்கு இடையிலும் காணப்படும் சின்னஞ்சிறு சச்சரவுகளினாலும் வழக்கம் போல நன்மையடையப் போவது அம்னோ ஆகும்.

ஒன்றிணைக்கும் பிரமுகர்

இப்போது அந்த ‘இனவாத’ கருத்துரையாளர்கள் கலவைக்கு புதிய வாசனைப் பொருளைச்  சேர்த்துள்ளனர்.

வரும் தேர்தலில் பக்காத்தான் இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த உதயகுமார் முடிவு செய்துள்ளது சதித் திட்டம் என்றும் ஹிண்ட்ராப்பும் உதயகுமாரும் பிஎன் கைப்பாவைகள் என்றும் கூறும் கருத்துக்கள் வெளியாகத் தொடங்கியுள்ளது.

பக்காத்தானுக்கு நட்புறவாக இருந்து கொண்டு நீங்கள் அந்த இடத்தில் வெற்றி பெற்றாலும் தோல்வி கண்டாலும் பக்காத்தானுக்கு எப்படி அந்த இடம் கிடைக்காமல் செய்ய முடியும்? அது உதயகுமாருக்கு நியாயமாக தெரியலாம். அது என் சிந்தனைக்கு அப்பாற்பட்டது.

உதயகுமாரை இனவாதி என்றோ சந்தர்ப்பவாதி என்றோ நிராகரித்து விடுவது அகங்காரமான காரியமாக இருக்கும். ஹிண்டாப்பும் உதயகுமாரும் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக பக்காத்தான் இன்றைய நிலையில் முக்கியமான பொறுப்புக்களில் இருக்கிறது.

உதயகுமாருக்கு ஹிண்ட்ராப் திருப்பு முனையாகும். அவர் அதனை ஒருங்கிணைக்கும் ஆர்வம் மிக்க பிரமுகர் ஆவார். முக்கிய சமூக நீரோடையிலிருந்து நீண்ட காலமாக ஒரம் கட்டப்பட்ட சமூகத்தின் துயரங்களை உதயகுமார் ஒருமுகப்படுத்தி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

‘இன உறவுகள்’ என்பது சீனர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் இடையிலானது என்று மட்டும் வரையறுக்கப்பட்டுள்ள அரசியல் சமூக சூழ்நிலையில் அந்த பிரச்னைகளை உதயகுமார் தொடர்ந்து எழுப்பி வருவது சமூக ரீதியில் இணக்கமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவது என வரும் போது அவருடைய வாதங்கள் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர முடியும்.

பெரும்பாலான மக்கள் செய்தியை விவாதிப்பதற்குப் பதில் அந்தச் செய்தியைத் தருகின்றவரையே கேலி செய்கின்றனர்.

வரும் அரசியல் சூறாவளியில் உதயகுமார் எத்தகைய பங்கை ஆற்றப் போகிறார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு அவர் வழி காணா விட்டால் அவரும் ஹிண்ட்ராப்பும் ஆற்றும் பங்கு, அதற்குக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்காது.

அந்த சூழ்நிலை இந்திய சமூகத்துக்கு பேரிழப்பாகும். பொதுவாக மலேசியர்களுக்கும் இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

———————————————————————————————————————————-

எஸ்.தயாபரன், (ஒய்வு பெற்ற) அரச மலேசியக் கடற்படைத் தளபதி ஆவார்.

TAGS: