STPM தேர்வெழுதிய மாணவர்கள் இங்கிலாந்தில் பயில்வதும் இனி காணல் நீர்தானா?

மலேசிய கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவிருக்கும் தவணை முறையிலான எஸ்.டி.பி.எம் தேர்வுமுடிவுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பதா; இல்லையா என இன்னும்  முடிவு செய்யவில்லை.

ஆட்சிமுறைகுட்படுத்தப்பட இனவாதத்தால , எஸ்.டி.பி.எம் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்சியடைந்திருந்தும்,  மலேசிய அரசாங்க பல்கலைகழகங்களில் இடம் கிடைக்காத இந்திய மாணவர்கள், தங்களின் வாழ்கை இலட்சியங்களை வென்றே தீரவேண்டும் என்னும் வைராக்கியத்தால்  வெளிநாட்டு பல்கலைகழகங்களை நாடுகின்றனர்.

புதிதாக அறிமுகம் செய்யப்படவிருக்கும் எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகளை அனைத்துலக பல்கலைகழகங்கள் ஏற்றுகொள்ளுமா என மலேசிய உயர் கல்வி அமைச்சர் தெளிபடுத்த வேண்டும் என்ற உத்திரவாதத்தை  கடந்த மார்ச் 9ஆம்  தேதி ஹிண்ட்ராப் மக்கள் சக்தி ஊடக அறிக்கையின் வழி கேட்டிருந்தது .

வழக்கத்தை போலவே ஹிண்ட்ராபின் நியாயமான இந்த கோரிக்கைக்கு யாரும் செவிசாய்க்கவில்லை .எந்த அரசியல் கட்சிக்கும்  , அரசியல் வாதிகளுக்கும்  இந்தியர்களின் அடிப்படை மனித உரிமை குழி தோண்டி புதைக்கப் படுவதை கண்டு கேள்வி எழுப்ப, நேரமோ, அக்கறையோ , தைரியமோ , விவேகமோ  இருக்காது என்பதை அறிந்து மேல் நடவடிக்கைகளை ஹிண்ட்ராப் ஆதரவாளர்களே மேற்கொண்டனர்.

இவ்விவகாரம்  குறித்து நம் இன மாணவர்கள் அதிகமாக பயிலும் குறிப்பிட்ட சில நாடுகளின் தூதரகங்களை அணுகி விளக்கங்கள் கோரப்பட்டது .  அப்போது  சட்ட துறை படிப்புகளுக்கு இந்திய மாணவர்கள் அதிகமாக நாடும் இங்கிலாந்து பிரிட்டீஷ் கவுன்சில்  அதிகாரி திடுக்கிடும் இத்தகவலை தெரியப்படுத்தினார்.

புதிய எஸ்.டி.பி.எம் தேர்வு முறையை பற்றி தமது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மின்னஞ்சல் மூலம் நன்றி கூறிய அந்த அதிகாரி , இது குறித்து இனிமேல்தான்  மலேசிய தேர்வு வாரியத்திடமிருந்து விளக்கம் கேட்கபோவதாக கூறியுள்ளார்.

விளக்கத்தை தொடர்ந்து லண்டனிலிருக்கும் பிரிட்டீஷ் கவுன்சில் தலைமையகம் , லண்டனில் இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களோடு கலந்துரையாடி   புதிய எஸ்.டி.பி.எம் தேர்வு  முடிவுகளை நுழைவு தேர்வாக ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று இனிமேல்தான்  முடிவெடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

இங்கிலாந்து அரசின் வெளி நாட்டு தேர்வு முறைகளை   கண்காணிக்கும் பிரிவு இந்த விவகாரத்தில் சம்பந்த படவிருப்பதாலும் , மலேசிய தேர்வு வாரியத்திடம் இது குறித்து அவர்கள் ஆய்வுகளையும் , நேர்காணல்களையும் மேற்கொள்ள  இருப்பதாலும் மலேசிய கல்வி அமைச்சு அறிமுக படுத்தவிருக்கும் புதிய எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகளை ஏற்பதா இல்லையா என்ற முடிவினை  எடுக்க இன்னும் பல மாதங்கள் ஆகும் என்றும் அந்த அதிகாரி தமது மின்னஞ்சலில் விளக்கியுள்ளார்.

நிலைமை இவ்வாறு இருப்பதால் பிரிட்டீஷ் பலகலைகழகங்களில் படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள்  ‘A ‘ level போன்ற மற்ற நுழைவு தேர்வுகளை எழதுமாரும் அந்த அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மலேசிய இந்திய வழக்கறிஞர்களில் பெரும்பாலானவர்கள் இங்கிலாந்தில் பயின்றவர்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. ஒருவேளை இந்த புதிய எஸ்,டி.பி.எம் தேர்வுமுறை இங்கிலாந்து பல்கலைகழகங்களில் அனுமதிக்கப் படாவிட்டால் சட்ட துறையில் இந்தியர்களின் ஈடுபாடு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை வாசகர்கள்  சிந்திக்க வேண்டும்.

சட்ட துறையில் மெட்ரிகுலேஷன் வாய்ப்பு கிட்டாத மாணவர்களும், எஸ்.டி.பி.எம் தேர்வுகளின் மூலம்  அரசாங்க பல்கலைகழகங்களில் சட்டம் பயில இடம் கிடைக்காத மாணவர்களும், இங்கிலாந்தில் சட்டம் பயில விரும்பினால் , பெற்றோர்கள் தம் பிள்ளைகளை ‘A’ level தேர்வு எழுத தங்களின் சேமிப்பிலிருந்து மேலும் குறைத்து  15,000 ரிங்கிட்டை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

கல்வி திட்டத்தில் ஒரு மாற்றம் செய்யும்போது அதன் விளைவுகளை சிந்தித்து பார்க்க தெரியாதவர்களை கல்வி அமைச்சின் மந்திரிகளாகவும்  , உயர் மட்ட அதிகாரிகளாகவும் பெற்றிருப்பது நமக்கு இடப்பட்டிருக்கும் சாபம் என்று கருதுவதா அல்லது  வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட சதிச்  செயல் என கொள்வதா?

ஒவ்வொரு கால கட்டத்திலும் இது போன்ற கல்வி, பொருளாதார, சமூக  திட்டங்களில் செய்யப்படும் திருத்தங்களால்  இந்திய சமூகம் எப்படியெல்லாம் பலியாக்கப்பட்டு எதிர்காலத்தில் வஞ்சிக்கப்படும் என்று முன்கூட்டியே தூரநோக்கோடு இந்திய தலைவர்கள் செயல்பட தவறியதால்தான், நாம் இன்று அனைத்திற்கும் கையேந்தி கொண்டிருக்கிறோம்.

இந்த அவல நிலைக்கு இந்தியர்கள்  மீண்டும் தள்ளப்படுவதை ஹிண்ட்ராப் வன்மையாக  கண்டிக்கிறது.

சர்வதேச பல்கலைகழகங்களின்  அங்கீகாரத்தை  மலேசிய கல்வி அமைச்சு உறுதி  செய்து மலேசியர்களுக்கு உத்திரவாதம் அளித்த பின்னரே  தவணை முறை எஸ்.டி.பி.எம் தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும் என்பது ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் கோரிக்கையாகும்.

மேலும் பட்டபடிபுக்கான புகுமுக தேர்வாக எஸ்.டி.பி.எம் , மெட்ரிகுலேஷன்  என்ற இருவேறு தேர்வு முறைகளை அமல்படுத்தாமல் சர்வதேச தரத்திற்கு ஏற்ப ஒரே தேர்வு முறையையும் கல்வி அமைச்சு அறிமுகப்படுத்த வேண்டும்.

ஒரே மலேசிய கோழம் போடும்   பாரிசான் அரசியல்வாதிகளாகட்டும்  , பல்லின கோட்பாடுகள் பேசும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளாகட்டும் உங்களுக்கு ஹிண்ட்ராபின் தாழ்மையான வேண்டுகோள்  , இந்தியர்களின் வாக்குகளுக்காக   மட்டும்  பல்லிளித்தது போதும் , அவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்க தைரியமில்லாவிட்டால்  விலகி கொள்ளுங்கள். மலேசிய இந்தியர்களின் அவலத்திலும்  , ஏழ்மையிலும் அரசியல் நடத்தி , உங்களின் அரசியல் அபிலாசைகளை  நிறைவேற்றிக்கொள்ள தொடர்ந்து அப்பாவிகளை ஏமாற்றாதீர்கள்.

வி.சம்புலிங்கம்
தேசிய ஒருங்கிணைப்பாளர்
ஹிண்ட்ராப் மக்கள் சக்தி

TAGS: