பெர்சே 3.0: அரப் ஸ்பிரிங் முதல் மலேசிய ஸ்பிரிங் வரை!

24.02.2012 அன்று வியூக அறை/ இரவு நேரம்- கடிகாரம் ஆப்ரகாம் லிங்கன் இறந்த நேரமான 10.10-தைக்
காட்டிக்கொண்டிருந்தது.

முகநூலைத் திறந்தால், ஒரே பெர்சே 3.0 அலைதான். பாரிசான் தலைவர்களைக் (காவல்துறைத் தலைவர்களும் இதில் அடங்குவர்) கேட்டால், பெர்சே 3.0 நாட்டின் அமைதிக்கு பெரிய மிரட்டல் என்றனர்.

அம்பிகாவும் ஏ.சமாட் சைடும் பெர்சே 3.0 டதாரான் மெர்டேகாவில்தான் என்பதில் உறுதியாக இருந்தனர். இப்படி இருக்கையில் ஓரிரு தினங்களில் தலைநகரை அடைய வேண்டும். அதற்க்கு முன், நமது தமிழ்/ இந்திய சகோதர சகோதரிகளிடம் சிறிது பேசிவிட்டு செல்லலாமே என்று எண்ணம் துடித்த போது, எனது மடிக்கணினி, அதற்க்கான வாய்ப்பை வழங்கியது.

மலேசிய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சீர்கேட்டு நடவடிக்கைகளை நிறுத்துவதுதான் பெர்சேவின்
தலையாய நோக்கம். தேர்தல் சீர்கேடுகளில் சிலவற்றைப் பட்டியலிடுகிறேன், உங்களுக்காக;

1. 31,294 வாக்காளர்களை வாக்களிக்கும் இடத்தை மாற்றியது (சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்
உள்பட).

2. 2011 பிற்பகுதியில், சபாக் பெர்ணாம், சுங்காய் பெசார்,உலு சிலாங்கூர்,தந்ஜோங் காராங் ஆகிய
இடங்களில் ஒரு கூட இறக்கவில்லை என்று ம.தே.ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது. ஆனால்,
ஏகப்பட்ட இறப்புப் பத்திரங்களை பதிவிலாகா வெளியாக்கியுள்ளது.

3. இருமுறை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, சபாவின் 15,520, சரவாக்கில் 8,585.
இவர்கள் அனைவரும் இரண்டாவது முறையாக (2012 முற்ப்பகுதியில்) சிலாங்கூரின் பதிவு செய்யப்
பட்டுள்ளனர்.

4. சிலாங்கூரில் மட்டும், வெளிநாட்டில் பிறந்த வாக்காளர்களின் (அடையாள அட்டை எண்ணில் ஏழாம்
எட்டாம் எண்கள் 71 என்று எழுதப் பட்டிருக்கும்) எண்ணிக்கை 7,841 ஆகும். (இந்த மண்ணில்
பிறந்து வளர்ந்து அடையாள அட்டை இல்லாமலிருக்கும் எத்தணையோ பேருக்கு இந்த
விஷயத்தில், அல்வாதான்!)

5. கெஅடிலான் துணைத் தலைவர், அஸ்மின் அலியின் நாடாள மன்ற தொகுதியில் மட்டும், 20,000-க்கு
மேற்ப்பட்டோரை வாக்காளர்களை பதிவு செய்துள்ளனர்.

மேற்க்காண்பவை, சில உதாரணங்கள் மட்டுமே. இன்னும் சொன்னால் சன் டீவி மெகா சீரியலையே தூக்கி
விழுங்கி விடும், இந்த மலேசிய தேர்தல் ஆணையம். அது சரி, இதற்க்கும் அரப் ஸ்பிரிங்கிர்க்கும் (Arab
Spring) என்ன சம்பந்தம்?

சென்ற வருடம் முதல் துனிசியா, எகிப்து, ஏமன், சீரியா போன்ற அரேபிய நாடுகளில் அடுத்தடுத்து
தொடச்சியாக வெடித்த மக்கள் புரட்சியே, அரப் ஸ்பிரிங் (Arab Spring) எனப்படும்.

லஞ்சம் போன்ற சீர்கேடுகளைக் கொண்ட அரசாங்க நிர்வாகம், தகவல் ஊடகங்களின் சுதந்திரத்தை
பறித்தல், வேலையில்லாத் திண்டாட்டம், மோசமான பொருளாதாரம், அன்றாட தேவைப் பொருட்களின்
விலையேற்றம், இஸ்ரேல் போன்ற மேற்க்கத்திய நாடுகளுக்கு அடிப்பணிதல், நாட்டின் செல்வத்தில்
கொள்ளையடித்தல், காவல்துறையின் அராஜகம் போன்றவைகள் அரப் ஸ்பிரிங்கின் தூண்டுதல்
காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், இதற்கெல்லாம் முக்கிய விசை (Main Switch) என்று கருதப்படுவது,
தேர்தல் சீர்கேடுகள்தான்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அரேபியா நாடுகளைப் பற்றி சற்று ஆராய்வோம். இவையனைத்துமே வேகு நாட்களாக ஒரே நபர்/கட்சி ஆட்சி செய்த நாடுகளாகும். தேர்தலில் 70% வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்றவை. ஆனால், இந்த 70% வாக்குகளுக்கும் அதிகமாக பெறக் காரணம், தேர்தல் சீர்கேடுகளே! இது விளங்க, தேர்தல் என்றால் என்ன என்பதையும் அதன் தத்துவத்தையும் சிறிதாவது விளங்கிக்கொள்ள வேண்டும்.

பேராவில் இருக்கும் முனுசாமி, தனது மகள் எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி அடைந்தும் அரசாங்க பல்கலைக்கழகத்தில் இடம் கிடைகாததை யாரிடம் முறையிடுவார்? மா.இ.காவின் உயர்க்கல்வி பகுதியிடமா? 80 வருடம் அரசாங்க நிலத்தில் வீடுகட்டி வசிக்கும் குளுவாங் இராமசாமி, தன்னை வெளியேரும்படி மாநில அரசாங்கம் காலக்கெடு தரும் போது, யாரிடம் முறையிடுவார்? டாக்டர்.சுப்ரமணியத்திடமா?

கேமரன் மலை மாரப்பன், கீ பார்மில் (Kea Farm) உள்ள தனது உறவினரின் கடை உடைக்கும் போது யாரிடம் முறையிடுவார்? தேவமணியிடமா? இன்னும் அடையாள அட்டை கிடைக்காத முணியாண்டி, அரசாக வேலைக் கிடைக்காக சரவணன், பெட்ரோல் விலையேற்றத்தால் நொந்திருக்கும் அறிவழகன், சீனி விலையால் வாடும் சகுந்தலா ஆகியோர் யாரிடம் முறையிடுவார்கள்?

மேற்க்கண்ட அத்தணை பிரச்சனைகளும் நாட்டின் நிர்வாக சீர்கேட்டினால் முளைந்ததாகும். குற்றம் செய்த நபர் நீதிமன்றத்தில் நிறுத்தப் படுகிறார். குற்றம் புரிந்துள்ள ஆளும் கட்சி நான்கு வருடத்திற்க்கு ஒருமுறை மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறது. மக்களே நீதிபதிகள். குற்றம் நிருபிக்கப்பட்ட ஆளும் கட்சி ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டு, வேறொரு கட்சி ஆட்சியில் அமைர்த்தப்படும். மறுபடியும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் நீதிமன்றம் கூடும். ஆளுங்கட்சி குற்றம் இழைக்கவில்லையென்றால், மறுபடியும் நான்கு ஆண்டு கால ஆட்சி வழங்கப்படும். மாறாக குற்றம் புரிந்திருந்தால், அந்தக் கட்சிக்கும் அதே கதிதான். சுறுக்கமாகக் கூறினால், தேர்தல் என்பது “மக்கள் நீதிமன்றம்” ஆகும். அப்படிப்பட்ட
மேன்மையுள்ள நீதிமன்றத்தை நிர்வாகிக்கத்தான் தேர்தல் ஆணையம். இதில் சீர்கேடு என்றால் எப்படி?

முதலில் நான் காட்டிய உதாரணப் பிரச்சனைகள் போன்று அரேபிய நாடுகளிளும் வேலையில்லாத்
திண்டாட்டம், மோசமான பொருளாதாரம், அன்றாட தேவைப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவை
நிகழ்துள்ளன. தேர்தல் எனும் மக்கள் நீதிமன்றத்தில் மக்கள் ஆளும் கட்சியை தண்டிக்க நினைக்கும் போது
தேர்தல் சீர்கேடுகள் மக்களின் முடிவை திரித்து விட்டது. வெகுகாலமாக இதை பொருத்துக் கொண்டிருந்த
அரேபிய மக்கள், வேறு வழியின்றி இறுதியில் “அரப் ஸ்பிரிங் (Arab Spring)” எனும் மக்கள் புரட்சி மூலமாக
ஆளும் கட்சியை விரட்டியடித்தனர். முகநூல் (Facebook) மற்றும் கூகள்(Google) ஆகியவை இதற்க்குப்
பெரும்பங்கையாற்றின.

நம் நாட்டிலும் அரசாங்க நிர்வாகத்தில் பலவகையான சீர்கேடுகள் உள்ளன என்பதை நான் சொல்லிதான்
உங்களுக்கு தேரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம், நீங்களும் நானும் உள்ப்பட அனைத்து
மலேசியர்களும் இந்த நாட்டின் நிர்வாக சீர்கேட்டினால் பாதிப்படைந்துள்ளோம்.

நாம் நமதுரிமையை நிலைநாட்ட முறைகேடுகள் நிறைந்த தேர்தல் ஆணையத்தை முதலில் பெர்சே மூலமாக சுத்தம் செய்வோம், பெர்சே மூலமாக நெருக்குதல் அளிப்போம். சீர்கேடு நிறைந்த மலேசிய தேர்தல் ஆணையத்தை சுத்தப்படுத்தவில்லையென்றால், அரப் ஸ்பிரிங் (Arab Spring) போன்று மலேசியா ஸ்பிரிங் (Malaysia Spring) நடந்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.

பெர்சே 3.0 பேரணி நாட்டின் அமைதியை சீர்குலைக்க அல்ல. நாட்டின் அமைதியையும் பொருளாதரத்தையும் காக்க. பெர்சே என்பது அன்வாரை பிரமராக்கும் பிரச்சனைப் பற்றியது அல்ல. இது மக்கள் உரிமையையும் நாட்டின் எதிர்காலத்தையும் பற்றியது. புரிந்துக் கொள்ளுங்கள், பெர்சே-வுடன் கைகோருங்கள்!

மீண்டும் வருவேன்……
தளபதி