மகள் மீது பாலியல் பலாத்காரம்:பிரெஞ்சு அதிகாரி கைது

தென் இந்திய மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவிலுள்ள பிரெஞ்சு துணைத் தூதரக அதிகாரி பஸ்கால் மசூரியே, தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மனைவி காவல்துறையினரிடம் புகார் செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பெங்களூரு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் தூதரக அதிகாரி என்பதால், இந்தியாவின் மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டாதாலேயே அவரை கைது செய்யும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

அச்சிறுமியின் தாய் இந்த மாதம் 13 ஆம் தேதியே காவல்துறையில் இது தொடர்பில் புகார் அளித்திருந்தாலும், அந்த அதிகாரி நேற்று முன்தினம்தான் கைது செய்யப்பட்டுள்ளார்.